ஒன்ராரியோவில் நான் எவ்வாறு திருமணம் செய்து கொள்வேன்?
திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.மேலும், அது 2 நபர்களுக்கிடையிலான (a legal contract) ஒரு சட்டரீதியான ஒப்பந்தமாகும்.
ஒன்ராரியோவில் திருமணம்செய்துகொள்ள சில விதிமுறைகளை நீங்கள் கண்டிப்பாக பூரணப்படுத்தியிருக்கவேண்டும். உதாரணமாக, நீங்கள் குறைந்தது 18 வயதை அடைந்திருக்க வேண்டும். மேலும், நீங்களும், உங்கள் (partner)துணையும் திருமணம்செய்ய பரஸ்பரம் உடன்பட்டிருக்கவேண்டும். திருமணத்துக்கு இரு சாராரும் சமூகமளித்திருக்க வேண்டும். நீங்கள் அல்லது உங்கள் (partner) துணை விவாகரத்துப் பெற்றவராக இருந்தால், விவாகரத்துக்கான சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். ஓரினத்தவரும் (same sex) எதிர்ப்பாலினத்தவரும் (opposite sex marriages) திருமணம்செய்வதை ஒன்ராரியோ அனுமதிக்கின்றது.
திருமணத்தைப் பொறுத்தவரை உங்கள் அல்லது உங்கள் துணையின் (citizenship) குடியுரிமையைக் கருத்தில் கொள்ள வேண்டிய எந்தச் சட்டங்களும் இல்லை. மேலும், திருமணம்செய்யும் உங்கள் தகுதியைப் பாதிக்கக்கூடிய, எவ்வளவு காலம் ஒன்ராரியோவில் வசித்திருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் எந்தச் சட்டங்களும் கிடையாது.
(Marriage ceremony)திருமண வைபவத்துக்கு முன்பு நீங்கள்(marriage license) திருமண அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். திருமண வைபவத்தை தொடர்ந்து,சுமார் 10 வாரங்களின் பின் (marriage certificate) திருமண அத்தாட்சிப் பத்திரத்துக்காக நீங்கள் விண்ணப்பித்திருக்க வேண்டும். திருமண அத்தாட்சிப் பத்திரம், நீங்கள் ஒன்ராரியோவில் திருமணம் செய்திருக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.
(Marriage ceremony)திருமணச் சடங்கை நிறைவேற்றிவைக்க யாரால் முடியும்?
ஒரு நீதபதி அல்லது(justice of the peace) சமாதான நீதவான் ஒருவரினால், (civil ceremony) திருமணம் நடாத்தி வைக்கப்படும் உங்கள் உள்ளூர்(municipal office) நகர சபை அலுவலகம் அல்லது (city hall) நகர சபை மண்டபத்தைத் தொடர்பு கொள்வதன் முலமாக எவ்வாறு சிவில் திருமணமொன்றை ஒழுங்குசெய்யலாம் என்பது பற்றிய தகவல்களைப் பெறலாம்.
திருமணங்களை நிறைவேற்றி வைக்க, சமய நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் மூலமாக ஒரு சமய வைபவத்திலும் (religious ceremony) நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்ராரியோ(Marriage Act) (1) திருமண சட்டத் தின்(1) கீழ், அவர் கண்டிப்பாகப் பதிவு செய்திருக்கவேண்டும். திருமண அனுமதிப் பத்திரத்தை நீங்கள் வைத்திருந்தால் அல்லது சில சமயங்களைப் பொறுத்தவரை (a publication of banns)பகிரங்க அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் ,அவருக்கு திருமண வைபவத்தை நிறைவேற்றி வைக்கமுடியும்.
ஒன்ராரியோவில் திருமண வைபவங்களை நிறைவேற்றிவைக்கும் (religious officials) சமய அலுவலகர்களின் பட்டியலைத்தெரிந்துகொள்ள, (Service Ontario) (2) ஒன்ராரியோ சேவை (2) என்ற இணையத்தளத்துக்குச் செல்லுங்கள். மேலதிக தகவல்ளை அறிந்துகொள்ள ஒன்ராரியோ சேவையுடன் தொலைபேசி மூலமாகவும் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.
இலவச தொலைபேசி இலக்கம்: 1-800-267-8097
டொரென்டோ: 416-325-1234
(Marriage ceremony)திருமண வைபவத்துக்குத் திட்டமிடல்
(wedding reception)திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அல்லது மற்றொரு வைபவத்தை இந் நிகழ்ச்சியுடன் சேர்த்து நடாத்துவதை குறிப்பாக நீங்கள் தெரிவு செய்தால், பல திட்டங்களை மேற்கொள்ளவேண்டி வரும்.
திருமண தினத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே பலர், திட்டமிடலை ஆரம்பிக்கின்றனர். உங்கள் திருமண விழாவை ஒரு பிரபலமான இடத்தில் நடாத்த நீங்கள் விரும்பினால், போதிய கால இடைவெளியை வைத்து நீங்கள் திட்டமிட வேண்டியிருக்கும்.
இருந்தபோதிலும் சில சமூகங்களில் திருமண வைபவங்களையும் விழாக்களையும் மிகக் குறுகிய கால இடைவெளியில் – திருமண திகதிக்கு சில மாதங்களுக்கு – சற்று முன்பிருந்தே திட்டமிடுவது மிகப் பொதுவாக இடம்பெறுகிறது.
திருமணத்துக்கான பொருட்கள்,சேவைகளுக்காக பல கம்பனிகள் கூடுதலான கட்டணங்களை அறவிடுகின்றன. நீங்கள் தீர்மானங்களை எடுக்க முன்பு விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்த ஆலோசனையாகும்.
ஒன்ராரியோவில் திருமணம் செய்த நண்பர்கள் அல்லது குடும்ப அங்கத்தவர்களை உங்களுக்குத் தெரிந்து இருந்தால், உங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் அவர்களிடம் இருக்கலாம். திருமணங்கள் திட்டமிடுவது பற்றி சூசகமான தகவல்களை பல இணையத்தளங்களும் வழங்குகின்றன.
மேலதிக தகவலுக்கு:
(1) Marriage Act:
http://findlink.at/mar-act
(2) ServiceOntario:
http://findlink.at/marriage....... (தொடரும்.)
0 comments:
Post a Comment