ஒளிர்வு-(16) மாசி த்திங்கள்-2012
தளத்தில்:சிந்தனைஒளி,கனடாவிலிருந்து....ஒருகடிதம்,கொலைவெறி,மனிதன்,வாழ்க்கையோடுவிளையாடுங்கள்…!! ஆராய்ச்சியாளரின் செய்திகள், உணவின் புதினம்,காக்க காக்க......கூடி வாழ்ந்தால்….கனடாவில்...திருமணம்,சிரிக்க...சிரிக்க...., விக்கல், சுபாஸ் சந்திரபோஸ், பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை, இராமாயணம் ஒரு புரட்டல்,மாசிமாதத்தில் சினிமா..

சிந்தனை ஒளி:


வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி.அழகான பசி.
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே.
ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும்.
இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
பின்கண்ணாடிவழி நடந்ததை பார்ப்பதைவிட,
முன்கண்ணாடிவழி முன்னே வருவதை பார்.

மனிதன்



பசிக்கு உணவு இல்லையே
என்று வருந்துகிறான் ஏழை,
உணவை உண்ணப் பசியில்லையே
என்று வருந்துகிறான் பணக்காரன்.
பணம் மிகுதியாய் உள்ளவனிடம்
மக்கள் நற்குணத்தைத் தேடவில்லை,
பணம் இல்லாதவனின் நற்குணத்தை
மக்கள் மதிக்கவில்லை.
ஏழைகளுக்காகப்  பாடுபடுகின்ற பலரும் கூட
பணக்காரர்களுக்குத் தான் நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஏழையின் உறவினை உதாசீனம் செய்யும் மனிதன்
 பணக்காரனின் உறவை பல விதங்களில் தேடுகிறான்.

ஆராய்ச்சியாளரின் செய்திகள்;

பரம்பரை நோய்களைத் தடுக்க: பிரிட்டனின் நியூகாஸ்ல் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு புதிய மரபணு ஆராய்ச்சிக்கூடத்தில் நடத்தப்படவுள்ள ஓர் முக்கிய ஆராய்ச்சியின் விளைவாக பல பரம்பரை நோய்கள் முற்றிலுமாக இல்லாது போகிற நிலை உருவாகலாம் என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆராய்ச்சி இடைநிறுத்தம்: பறவைக் காய்ச்சலை உண்டாக்கும் H5N1 வைரஸ் கிருமியின் செயற்கை வகை ஒன்றை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், அந்த செயற்கை வைரஸினால் உலகின் பாதுகாப்புக்கு குந்தகம் வரலாம் என அஞ்சி தமது ஆராய்ச்சிகளை இடைநிறுத்த உடன்பட்டுள்ள்னர்.
விளையாடும் குழந்தை: எப்போதும் துறுதுறுவென விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு கல்வித்திறன் அதிகமாக இருக்கும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது ஏனெனில், விளையாடும் போது ஒரு குழந்தையின் உடல் உறுப்புகள் நன்றாக இயங்குகின்றன. இதனால் அவர்களது உடல் உறுப்புகளுக்கு ரத்தம் சீராக பாய்கிறது. இதனால் மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைக்கிறது. மூளைக்கு அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால் புதிய நரம்பு செல்கள் உண்டாகின்றன. இதனால் ஓடியாடி விளையாடும் குழந்தையின் கல்வித் திறன் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உயர் இரத்தழுத்தம்: தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிடுங்கள் குருதி அழுத்தமெல்லாம் காணாமலேயே போய் விடும். இப்படிச் சொல்லியிருப்பது ஆஸ்திரேலியாவின் ஆராய்ச்சி முடிவு ஒன்று.
அறிவாற்றல்: எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும் என்கின்றனர் நார்வே நாட்டின் ஸ்தவஞ்சர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர். எழுதும் போது மூளையின் உணரும் பகுதியில் எழுத்துக்களின் உருவம் படிந்து விடுகிறது. ஆனால், டைப் செய்யும் போது அவ்வாறு படிவதில்லை. டைப் செய்வது படிப்பதற்கு வலு சேர்ப்பதில்லை. இதேபோல், உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிந்து விடுகின்றன. உடல் அசைவுகள் இல்லாத பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிவதில்லை.
மற்றொருவர் உடல் அசைவுகளுடன் பேசும் போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். அதையே நாம் நம் உடல் அசைவுகளுடன் செய்யும் போது பதிவதில்லை போன்றவை ஆய்வில் தெரிய வந்துள்ளன.
ஞாபக சக்தி: ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு வகைகள் எவை என்பதனை மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காரட்,தக்காளி,திராட்சை.ஆரஞ்சு,செர்ரி போன்ற பள பளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள்,மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. மூளையின் ஞாபக சக்தியை சிறப்பாக தக்க வைத்துக்கொள்வதற்கு கொழுப்பு சத்து தேவை. இது மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும். மூளையின் செல்கள் அழியாதிருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.
ஆண்களே தூங்குங்க!:இளைஞர் ஒருவர் நாளொன்றுக்கு 5 மணிநேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால்,அவரது பாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன்கள்  அளவு குறைந்துவிடும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.அதுவும் நாளொன்றுக்கு 5 மணியிலும் குறைவாகத் தூங்கும்போது,ஒரு  வார காலத்துக்குள்ளாகவே அதன் பாதிப்பை உணரலாம் என்று மேலும் அந்த ஆய்வு கூறுகிறது.
 எடை குறைய:பால் கலக்காத தேநீர் குடித்து வந்தால் உடலின் எடை அதிகரிக்காமல் கணிசமான அளவு குறையுமென ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.ஏனெனில் தேநீரில் எடையினை குறைக்கக் கூடிய பல மூலப்  பொருட்கள் உள்ளன.அதே நேரத்தில் வெறும் தேனீர் இரத்த அழுத்தத்தினையும் குறைக்கவல்லது.தினமும் 3 கப் தேனீர் அருந்தினலே இரத்த அழுத்தம் குறையும் என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் கண்டுபிடிதிருக்கிரார்கள்.
ந்யூரோ போன்!:இது மிகச் சிறிய அளவில் எங்கும் எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் செல் போlன் வடிவில் அழகுற அனைவரையும் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருப்பதோடு மிகவும் மலிவாகவும் இருப்பது ஒரு அதிசயம் தான்உலகையே அதிரடியாக பிரம்மாண்டமான அளவில் மாற்ற இருக்கும் ந்யூரோபோன் என்று பெயரிடப்பட்டிருக்கும் புதிய போன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது! இனி மொபைல் போன் அல்லது கைபேசி என அழைக்கப்படும் செல் போனில் டொக் டொக் என்று எண்களை அமுக்கி டயல் செய்ய வேண்டாம். உங்கள் வாய்ச்சொல் மூலமாகவே அதை டயல் செய்து இயக்கலாம்!
அதிசயமான இந்த பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருப்பவர் பெயர் ட்ஸி பிங் ஜங் (Tzyy Ping Jung). இவர் அமெரிக்காவில் கலிபோர்னியோ மாகாணத்தில் சான்டியாகோ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இருக்கும் ஸ்வார்ட்ஸ் சென்டர் ஃபார் கம்ப்யூடேஷனல் ந்யூரோஸயின்ஸில் ஆராய்ச்சியாளராக இருக்கிறார்.
ஜங் இது பற்றி "கடுமையாக ஊனமுற்றிருப்பவர்கள் இதை எளிதாக இயக்கலாம்" என்று பெருமிதத்துடன் கூறுகிறார். இதை இயக்க கைகளே தேவை இல்லை. வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு அதி கவனமாக இருக்க வேண்டிய பயனாளிகளுக்கு இது ஒரு வரபிரசாதம்.
ரெட் வைன்,மாரடைப்பு:ரெட் வைன் குடித்தல் மாரடைப்பு போன்ற இதயநோய்களிருந்து பாதுகாப்பு அளிப்பதாகநம்பப்படுகிறது.ஆனால் லண்டன் தோற்று நோய் தொடர்பான ஒரு ஆய்வு நிறுவனத்தின்  அடிசன் அண்ட் மெண்டல் கெல்த் பிரிவு ஜுர்கேன்ரேம் தலைமையில் நடந்த ஆய்வில் அந் நம்பிக்கை மறுக்கப்பட்டுள்ளது. மேலும்,அவ்வறிக்கையில்  உணவு,உடல்பயிற்சி போன்ற வாழ்க்கை முறைகளாலேயே உடல்நலம் காக்கப்படலாமேயன்றி மதுவோ,புகையிலையோ அல்ல.
4 வது பூமி:விண்வெளியில் எமது பூமியை ஒத்த உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் உண்டா என்ற தேடலின் விளைவாக இதுவரை வானியலாளர்களால் 4 புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் இறுதியாக இணைந்திருப்பது பூமியில் இருந்து 22 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள GJ 667C என்ற குறியீட்டுப் பெயருடைய நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள் (GJ 667Cc) ஒன்று.
இந்தக் கோள் பூமியை விட பெரிய பருமனுடன்.. 4.5 மடங்கு அதிக அளவு திணிவையும் கொண்டிருப்பதுடன் 28 பூமி நாட்களில் அதன் சூரியனைச் சுற்றியும் வந்துவிடுகிறதாம்..! இந்தக் கோளிலேயே உயிரினங்கள் வாழக் கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மூளை செல்: மனிதன் மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அதை சரிபடுத்துவது மிகவும் கடினமாகும். ஆனால் மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மனித தோலில் இருந்து மூளை செல்களை உருவாக்க முடியும் என்று கண்டுபிடித்து உள்ளனர்.
 இதன் மூலம் பக்கவாத நோய் மற்றும் மூளையால் ஏற்படும் பார்வை இழப்பை தடுக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தக்காளி:சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். தக்காளி உள்ளிட்ட சிவப்பான பழங்களில் லைகோபீன் என்ற சத்து உள்ளது. அந்த பழங்களுக்கு சிவப்பு நிறத்தை கொடுப்பதுகூட லைகோபீன்தான். வெறும் தக்காளியிலேயே இது அதிகம் உள்ளது. சற்று எண்ணெய் விட்டு சமைக்கும்போது, லைகோபீன் சத்து அதிகமாகிறது. நோயின் தீவிரத்தை குறைப்பது மட்டுமின்றி, பரவி வரும் கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு ஆரோக்கியம் தருகிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
தாவரங்கள்:செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்று இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ் கொடியானது ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப்பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் ஒருவித வாயுவை வெளியேற்றி, ஒலியை ஏற்படுத்தி பக்கத்தில் உள்ள செடியை எச்சரிக்கை செய்கிறது. இதனை நுட்பமான கமெராவின் மூலம் ஆய்வு செய்து முதன் முறையாக விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இருதய நோய்-:ஆண்கள் தங்கள் தந்தையரிடமிருந்து இருதய நோயை பெற்றுக் கொள்வார்கள் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்தந்தையரிடமிருந்து மகன்மாருக்கு இந்த நோயின் தாக்கம் செல்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக சென்றிருப்பதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள். பிரித்தானியாவில் ஐந்தில் ஒருவர் இதனைக் காவுகின்றனர். பெண்களிலும் பார்க்க ஒரு தசாப்தம் முன்னதாகவே ஆண்களுக்கு இருதய நோய் வந்து விடுகின்றது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 40 வயதில் உயிராபத்து ஆண்களுக்கு இரண்டில் ஒன்று என்றும் பெண்களுக்கு மூன்றில் ஒன்று என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



கனடாவில்....................



ஒன்ராரியோவில் நான் எவ்வாறு திருமணம் செய்து கொள்வேன்?
திருமணம் என்பது ஒருவரின் வாழ்வில் மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியாகும்.மேலும், அது 2 நபர்களுக்கிடையிலான (a legal contract) ஒரு சட்டரீதியான ஒப்பந்தமாகும்.

ஒன்ராரியோவில் திருமணம்செய்துகொள்ள சில விதிமுறைகளை நீங்கள் கண்டிப்பாக பூரணப்படுத்தியிருக்கவேண்டும். உதாரணமாக, நீங்கள் குறைந்தது 18 வயதை அடைந்திருக்க வேண்டும். மேலும், நீங்களும், உங்கள் (partner)துணையும் திருமணம்செய்ய பரஸ்பரம் உடன்பட்டிருக்கவேண்டும். திருமணத்துக்கு இரு சாராரும் சமூகமளித்திருக்க வேண்டும். நீங்கள் அல்லது உங்கள் (partner) துணை விவாகரத்துப் பெற்றவராக இருந்தால், விவாகரத்துக்கான சரியான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். ஓரினத்தவரும் (same sex) எதிர்ப்பாலினத்தவரும் (opposite sex marriages) திருமணம்செய்வதை ஒன்ராரியோ அனுமதிக்கின்றது.

திருமணத்தைப் பொறுத்தவரை உங்கள் அல்லது உங்கள் துணையின் (citizenship) குடியுரிமையைக் கருத்தில் கொள்ள வேண்டிய எந்தச் சட்டங்களும் இல்லை. மேலும், திருமணம்செய்யும் உங்கள் தகுதியைப் பாதிக்கக்கூடிய, எவ்வளவு காலம் ஒன்ராரியோவில் வசித்திருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் எந்தச் சட்டங்களும் கிடையாது.

(Marriage ceremony)திருமண வைபவத்துக்கு முன்பு நீங்கள்(marriage license) திருமண அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பம் செய்திருக்க வேண்டும். திருமண வைபவத்தை தொடர்ந்து,சுமார் 10 வாரங்களின் பின் (marriage certificate) திருமண அத்தாட்சிப் பத்திரத்துக்காக நீங்கள் விண்ணப்பித்திருக்க வேண்டும். திருமண அத்தாட்சிப் பத்திரம், நீங்கள் ஒன்ராரியோவில் திருமணம் செய்திருக்கின்றீர்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

(Marriage ceremony)திருமணச் சடங்கை நிறைவேற்றிவைக்க யாரால் முடியும்?
ஒரு நீதபதி அல்லது(justice of the peace) சமாதான நீதவான் ஒருவரினால், (civil ceremony) திருமணம் நடாத்தி வைக்கப்படும் உங்கள் உள்ளூர்(municipal office) நகர சபை அலுவலகம் அல்லது (city hall) நகர சபை மண்டபத்தைத் தொடர்பு கொள்வதன் முலமாக எவ்வாறு சிவில் திருமணமொன்றை ஒழுங்குசெய்யலாம் என்பது பற்றிய தகவல்களைப் பெறலாம்.

திருமணங்களை நிறைவேற்றி வைக்க, சமய நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர் மூலமாக ஒரு சமய வைபவத்திலும் (religious ceremony) நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஒன்ராரியோ(Marriage Act) (1) திருமண சட்டத் தின்(1) கீழ், அவர் கண்டிப்பாகப் பதிவு செய்திருக்கவேண்டும். திருமண அனுமதிப் பத்திரத்தை நீங்கள் வைத்திருந்தால் அல்லது சில சமயங்களைப் பொறுத்தவரை (a publication of banns)பகிரங்க அறிவித்தல்கள் கொடுக்கப்பட்டிருந்தால் ,அவருக்கு திருமண வைபவத்தை நிறைவேற்றி வைக்கமுடியும்.

ஒன்ராரியோவில் திருமண வைபவங்களை நிறைவேற்றிவைக்கும் (religious officials) சமய அலுவலகர்களின் பட்டியலைத்தெரிந்துகொள்ள, (Service Ontario) (2) ஒன்ராரியோ சேவை (2) என்ற இணையத்தளத்துக்குச் செல்லுங்கள். மேலதிக தகவல்ளை அறிந்துகொள்ள ஒன்ராரியோ சேவையுடன் தொலைபேசி மூலமாகவும் நீங்கள் தொடர்புகொள்ளலாம்.

இலவச தொலைபேசி இலக்கம்: 1-800-267-8097

டொரென்டோ: 416-325-1234

(Marriage ceremony)திருமண வைபவத்துக்குத் திட்டமிடல்
(wedding reception)திருமண வரவேற்பு நிகழ்ச்சியை அல்லது மற்றொரு வைபவத்தை இந் நிகழ்ச்சியுடன் சேர்த்து நடாத்துவதை குறிப்பாக நீங்கள் தெரிவு செய்தால், பல திட்டங்களை மேற்கொள்ளவேண்டி வரும்.

திருமண தினத்துக்கு ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே பலர், திட்டமிடலை ஆரம்பிக்கின்றனர். உங்கள் திருமண விழாவை ஒரு பிரபலமான இடத்தில் நடாத்த நீங்கள் விரும்பினால், போதிய கால இடைவெளியை வைத்து நீங்கள் திட்டமிட வேண்டியிருக்கும்.

இருந்தபோதிலும் சில சமூகங்களில் திருமண வைபவங்களையும் விழாக்களையும் மிகக் குறுகிய கால இடைவெளியில்திருமண திகதிக்கு சில மாதங்களுக்குசற்று முன்பிருந்தே திட்டமிடுவது மிகப் பொதுவாக இடம்பெறுகிறது.

திருமணத்துக்கான பொருட்கள்,சேவைகளுக்காக பல கம்பனிகள் கூடுதலான கட்டணங்களை அறவிடுகின்றன. நீங்கள் தீர்மானங்களை எடுக்க முன்பு விலைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது சிறந்த ஆலோசனையாகும்.

ஒன்ராரியோவில் திருமணம் செய்த நண்பர்கள் அல்லது குடும்ப அங்கத்தவர்களை உங்களுக்குத் தெரிந்து இருந்தால், உங்களுக்குத் தேவையான ஆலோசனைகள் அவர்களிடம் இருக்கலாம். திருமணங்கள் திட்டமிடுவது பற்றி சூசகமான தகவல்களை பல இணையத்தளங்களும் வழங்குகின்றன.

மேலதிக தகவலுக்கு:
(1) Marriage Act:
http://findlink.at/mar-act

(2) ServiceOntario:
http://findlink.at/marriage....... (தொடரும்.)