எடைகுறைய:கண்களை மூடினால் எடை குறையும் என மனோதத்துவ முறை சிகிச்சையில்சாத்தியமாகும் என்கின்றனர் உளவியல் ஆய்வாளார்கள்.மனோதத்துவ ரீதியான பயிற்சியினால் கண்களை மூடும்போது உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் உடலில் வெளிக்காட்டப்பட்டு எடை தானாகக் குறையும்.
மனதின் இயல்பான நிலைக்கு ஹிப்னோசிஸ் என்று பெயர்.நாம் விழித்திருக்கும் போது மனது ஒருமாதிரியாகவும்,தூங்கும்போது இன்னொருமாதிரியாக வும் இருக்கும்.ஆனால் மெய் மறந்த நிலையில் நாம் ஆழ்ந்த நிலையில் இருக்கும்போது உடலில் பல மாற்றங்கள் நிகழும்.
மருத்துவ ரீதியாக செயற்படும் இந்த ஹிப்னோதெரபியில் மனிதனின் இயல்பான மனம் விஸ்வருபம் எடுக்கும்போது அதன் விளைவுகளால் உடலில் பல கோளாறுகள் குணமாகின்றன.இதை நான்கு முதல் ஆறு வாரம் வரை செய்ய வேண்டும்.மன அழுத்தம் குறையும் போது உடல் சீராகி,எடை குறைந்து கொள்ளும்.
முட்டையுடன்கோழி:முட்டை வெளிவந்து 48 மணி நேரம்வரை அதனோடு தொடர்பு வைத்திக்கொண்டிருக்கிறது கோழி! பதினொரு வகை ஒலிக்குறிப்புகள் வல்லுனர்களால் பதிவு செய்யப்பட்டு, மேற்படி தகவலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். தாய்க் கோழி ‘ப்ளாக்’ என்ற பாச ஒலியை எழுப்புவதாகவும், கரு முட்டை ‘பீப்’ என்ற வாஞ்சை ஒலியை பதிலாக எழுப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
48 மணி நேரம்வரை நீடிக்கும் இந்த உறவுப்பரிமாற்றம் பின்னர் நின்று கோழியும் முட்டையும் வேறாகி விடுகின்றன.
சிகரெட்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் புதிய வகை சிகரெட் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். திராட்சை விதையில் இருந்து இதை உருவாக்கி உள்ளனர். புகையிலையால் தயாரிக்கப்பட்ட சிகரெட் போல இந்த சிகரெட் உடல் நலத்தை பாதிக்காது. விஷத்தன்மை இருக்காது. இருந்தாலும் புகையிலை சிகரெட்டை புகைத்தால் என்ன உணர்வு ஏற்படுமோ அதே உணர்வு இந்த சிகரெட்டிலும் ஏற்படும். அதே நேரத்தில் புதிய சிகரெட் மூலம் புகையை உள்ளே இழுப்பதால் அதனால் சில பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால் புகையிலை சிகரெட் போல அதிக பாதிப்பு ஏற்படாது என்பதால் புகை பழக்கத்தை கைவிட முடியாதவர்கள் இந்த சிகரெட்டை புகைக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருந்து:உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை குணப்படுத்த புதிய மருந்தை அமெரிக்க உதா பல்கலைக்கழகத்தின் மருந்தியல் பள்ளி விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்..
மனித குரங்குகளில் இருந்து உருவாகும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் சிறிய வகை குரங்குகள் மூலம் மனிதர்களுக்கு எய்ட்ஸ் கிருமிகளாக பரவுகின்றன. அவ்வாறு பரவும் எச்.ஐ.வி வைரஸ் கிருமிகளை இந்த மருந்து அழிக்கும் தன்மை உடையது. இதை எச்.ஐ.வி கிருமிதாக்கிய 40 குரங்குகளுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில் பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது.
எனவே எய்ட்ஸ் நோய் மேலும் உருவாகாமல் தடுக்க முடியும். தற்போது எச்.ஐ.வி கிருமிகளை அழிக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மருந்தின் மூலம் எய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தும் புதிய மருந்தை தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மூளை சுறுசுறுப்பாக:நியூசிலாந்தின் மஸ்ஸே பல்கலைக்கழக பேராசிரியர் வெல்மா ஸ்டோன்ஹவுஸ் தலைமையிலான குழுவினர், ஞாபக சக்திக்கும், மீன்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக 176 பேரை தேர்ந்தெடுத்து அவர்களின் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை மதிப்பீடு செய்தனர். பின்னர், இவர்களுக்கு பல்வேறு வகையான கடல் மீன் உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து ஆய்வு செய்தனர்.
மீண்டும் அவர்களிடம் ஞாபக சக்தி, அறிவுக் கூர்மை ஆகியவற்றை பரிசோதித்தபோது, ஞாபக சக்தி 15 சதவீதம் அதிகரித்திருந்தது தெரியவந்தது. அதாவது, மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமிலம் மனித உடலில் உருவாகாது. எனவே, மீன்களை சாப்பிடுவதன் மூலமே இதைப் பெற முடியும். இது வாழ்நாள் முழுவதும் மூளையின் செயல்பாட்டுக்கு மிகவும் அவசியமாகிறது. மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது? என ஸ்டோன்ஹவுஸ் தெரிவித்துள்ளார்.
கர்ப்பத்திற்கு:விற்றமின் சத்துள்ள உணவை உண்ணும் இளம் பெண்கள் விரைவாக கருத்தரிக்கிறார்கள் என்று மருத்துவ ஆய்வில் பிரித்தானியாவின் வார்விக் பல்கலைக்கழகம் இதனைக் கண்டுபிடித்துள்ளது.
கருத்தரிக்காத 58 பெண்களை ஆய்வுக்குத் தேர்வு செய்து, இந்த ஆய்வைத் தொடங்கிய பிறகு விற்றமின் சத்துள்ள உணவைச் சாப்பிட்டவர்கள் வெகு வேகமாக கருத்தரித்தனர். அத்துடன் அவர்களுடைய கருவும் 12 வாரங்களுக்குப் பிறகும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் வளர்ந்துகொண்டே வந்தது. விற்றமின் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட 30 பேரில் 18 பேர் கருத்தரித்தனர். இது 60 வீதம் ஆகும்.
எனவே குழந்தை இல்லாதவர்கள் முதலில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள சத்துள்ள உணவை போதிய அளவு உட்கொள்ள வேண்டும்.
குழந்தை நல்ல வலுவுடனும் மூளைத் திறனுடனும் பிறக்க தாயாருக்கு சத்துள்ள, சரிவிகித உணவை அளிக்க வேண்டியது கட்டாயம். விற்றமின் பி-12 சத்து அவசியம் தேவை என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணம் ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள் தொலைக்காட்சி: இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்த்தால், அவர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மேலும் அத்தகைய குழந்தைளின் பேச்சுத்திறன் தாமதப்படுவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். இந்தக் குறைபாடுகளைப் போக்க, இந்த வயது வரம்புக்குள்பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க அவர்களிடம் பெற்றோர்கள் பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment