*..உன்னை நேசிப்பவர்களை எண்ணிச் சந்தோசப்படு,
உன்னை வெறுப்பவர்களை எண்ணித் துக்கப்படாதே.
*..உன்னை ஆதரிப்பவர்களை எண்ணி உற்சாகப்படு,
உன்னை எதிர்ப்பவர்களை எண்ணி சோர்வடையாதே.
*..உன்னை உயர்வாக எண்ணுவர்களுக்கு நன்றியோடிரு,
உன்னை அற்பமாக எண்ணுகிறவர்கள்மேல் வெறுப்படையாதே.
*..உனக்கு உதவினவர்களை ஒருபோதும் மறவாதே,
உனக்கு உதவாதவர்களை எண்ணி கசக்காதே.
*..உன்னை பாராட்டு கின்றவர்களை எண்ணி திருப்தியாயிரு,
உன்னை விமர்சிக் கிறவர்களை எண்ணி அதிருப்தியடையாதே.
nice
ReplyDeleteஇது வாசிப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது.ஆனால் நடைமுறை என்று வரும் போது இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும்?என்னை நூறு பேர் நம்மை வாழ்த்திப் பேசினாலும் ,யாரென்றாலும் ஒருவர் நம்மை அவமானப்படுத்தும்படியான ஒரு சம்பவம் நடந்தால் அது தானே நம்மை அதிகம்
ReplyDeleteபாதிக்கிறது ?இல்லையா?
எல்லாம் எங்கள் மனம் தான்.இவ் உதாரணத்தினைப் படியுங்கள்.காட்டினுள் யானை நடந்து செல்லும்போது காட்டு நாய்கள் பல சேர்ந்து குரைத்தாலும்,அது செவிடன் காதில் சங்கு போன்று கவனியாது தன வழியில் செல்லுமாம்.குரைத்துக் களைப்பது நாய்கள் தான்.
Delete