நடனம் ……குறைவான உடல் உழைப்பு, மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம். தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது. இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை மெல்லியதாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது
.கேம்ஸ் …..வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள் படிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் படுசுட்டிகளாக திகழ்கின்றனர் என அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைகக்கழகத்தின் மனவியல் துறை சார்பில் லின்டா ஜாக்சன் தலைமையில் சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்று கூறுகிறது .வீடியோகேம்கள் குழந்தைகளை
அதிபுத்திசாலிகளாக மாற்றுகின்றன.அவர்களது கற்பனை திறன் அபாரமாக அதிகரிக்கிறது. மேலும், இக்கட்டான சூழலில் உடனுக்குடன் எப்படி முடிவெடுப்பது என்ற ஆற்றல் அவர்களிடம் வளர்கிறது. இது நிஜ வாழ்க்கையில் அவர்களுக்கு மிகமிக உதவிகரமாக இருக்கும். வீடியோகேம் ஆடும் குழந்தைகள் ஓவியம் வரைதல், கதை எழுதுதல் போன்றவற்றில் அசத்துகின்றனர். சிக்கலான புதிர்களுக்கு நொடிப்பொழுதில் விடை காண்கின்றனர். காரணம், வீடியோகேம் ஆடும்போது மனம் ஒருமுகப்படுகிறது. மூளை செயல்பாடுகள் சுறுசுறுப்படைகின்றன. எந்த வீடியோகேம் ஆடுகின்றனர் என்பதில் மட்டும் பெற்றோர் கவனமாக இருந்தால் போதும். அதிக நேரம் உட்கார்வதால், கண்ணுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதையும் புரிய வைக்க வேண்டும். மற்றபடி, வீடியோகேம் என்றாலே அலற தேவையில்லை.
கண்……பொறந்ததுல இருந்து கண் கருப்பாவே இருக்கு.. போரடிக்குது’– இந்த ரேஞ்சுக்கு அலுத்துக் கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி சொல்கின்றனர் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். 20 நொடி லேசர் சிகிச்சையில் கண்ணின் நிறத்தை மாற்றிக் கொள்ள முடியுமாம். அமெரிக்காவின் ஸ்டிரோமா கண்ஆராய்ச்சி மைய நிபுணர் க்ரேக் ஹோமர் தலைமையில் தீவிர ஆய்வு நடத்தி இதை கண்டுபிடித்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதுபற்றி கிரேக் கூறுகையில், ‘‘லேசர் மூலம் 20 நொடியில் கண்ணின் பிக்மென்ட் (நிறமிகள்) நிறம் மாற்றப்படுகின்றன. இப்போதைக்கு கண்ணை பிரவுன், நீல நிறத்துக்கு மாற்ற முடியும். மற்ற கலர்களை கொண்டு வருவது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. விரைவில் அதுவும் சாத்தியம் ஆகும். முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் உதவியுடன் இந்த சிகிச்சை நடக்கிறது’’ என்றார்.
பேட்டரி…வெறும் 15ம் நிமிடம் ரீசார்ஜ் செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக்கூடிய செல்போன் பேட்டரி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குறைந்த நேரம் ரீசார்ஜ் செய்து, அதிக நேரம் பயன்பாட்டில் இருக்ககூடிய பேட்டரி தயாரிப்பில் வடமேற்கு வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ததன் மூலம் செல்போன், ஐபோனில் பயன்படுத்தப்படும் வீரியம் கூடிய லித்தியம் ஐயன் பேட்டரியை கண்டுபிடித்தனர். இது தற்போது நடைமுறையில் உள்ள செல்போன் பேட்டரி தொழில்நுட்பத்தைவிட 10 மடங்கு சக்திவாய்த்தது. இதை தொடர்ந்து எலக்ட்ரிக் கார் மற்றும் பல பயன்பாட்டுக்கான சக்தி வாய்ந்த பேட்டரிகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வகை பேட்டரிகள் அடுத்த 3 ஆண்டுகளில் சந்தையில் கிடைக்கும் என்று பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொட்டாவி ….ஒருத்தர் ஓவரா கொட்டாவி விட்டு கொண்டே இருந்தால்உங்களுடைய மூளை ரொம்ப சூடாக இருக்கிறது என்பதன் அறிகுறி அது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவில் நடந்த விரிவான ஆராய்ச்சியில் இது கண்டுபிடிக்கபட்டது .. நமது மூளை சூடாகும் போது அதை குளிரச் செய்ய என்ன செய்யலாம் என உடல் யோசிக்கிறது. எனவே அது கொட்டாவி மூலம் நிறைய காற்றை உள்ளே செலுத்தி மூளையை குளிர வைக்க முயல்கிறது என்பது தான் இவர்களுடைய கண்டு பிடிப்பின் சாராம்சம் . குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி விடுவதன் காரணம் இது தானாம். அதெப்படி குளிர்காலத்தில் அதிகம் கொட்டாவி? வெயில் காலத்தில் தானே மூளை அதிகம் சூடாகும்? அப்போது தானே அதிகம் கொட்டாவி தேவைப்படும்? என்று தானே நினைகிறீர்கள்?ஆராய்ச்சி என்ன சொல்கிறதென்றால், நமது உடலுக்கு வெளியே உள்ள காற்றுகுளிராய் இருக்கும் போது தான் அது மூளையை குளிர செய்ய முடியும். எனவே தான் குளிர் காலத்தில் அத்திட கொட்டாவி மூலம் அதிக குளிர்காற்றி உடல் உள்வாங்குகிறது. வெயில் காலத்தில் கொட்டாவி விட்டால் மூளை மேலும் அதிகள் வெப்பமடையும் ஆகையால் உடல் அதை அனுமதிக்க மறுத்து விடுகிறது. உடலின் தன்மைக்கு ஏற்பவும், சூழலுக்கு ஏற்பவும் கொட்டாவி வருகிறது எனும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் ஒரு புதிய விஷயமாக கருதப்படுகிறது. குறிப்பாக M.N.T எனப்படும் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் கொட்டாவியை வர வைக்கும். அந்த நோயாளிகளின் மூளை அதிக வெப்பமாக இருப்பது கூட இதன் காரணாமாக இருக்கலாம் எனும் கோணத்தில் ஆராய்ச்சிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு வாசல் திறந்து வைத்திருக்கிறது.
No comments:
Post a Comment