சைக்கிள்கள்:பொதுவாக கேபிள்கள் மூலமே மோ. சை க்கள் மற்றும் சைக்கிள்களுக்கான பிறேக் வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது வயர் மூலமாக பிறேக் பிடிக்க கூடியவாறு புத்தம் புதிய சைக்கிளை வடிவமைத்துள்ளார்களாம் யேர்மனியின் சார்லண்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள். இதற்காக கணணியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். எனவே மிக விரைவில் இவ்வாறு வயர்லஸ் மூலமாக பிறேக் பிடிக்க கூடிய சைக்கிள்களை சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கின்றார்கள். இது ஒரு ஆச்சரியப்படவைக்கும் கண்டுபிடிப்பு எனவும் விரைவில் அனைவரும் வயர்லஸ் பிறேக்குடன் கூடிய சைக்கிள் பாவிக்க முடியும் எனவும் பல்களைக்கழக பேராசிரியரான ஹோக்லர் என்பவர் தெரிவித்துள்ளார்.
எலும்பு:எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எலும்பினால் காயங்களைக் குணப்படுத்த முடியுமென்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த மூலப்பொருளினை சேதமடைந்த இயற்கையான எலும்புடன் இணைக்கமுடியும் என்றும் இதன்மூலம் புதிய கலங்களை அப்பகுதியில் உருவாக்க இது உதவுகின்றதெனவும் கூறப்படுகின்றது.
இந்த ஆய்வானது வோசிங்ரன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. எலும்பு போன்ற செரமிக் தூளினை ஒரு ஊட்டமாகக் கொண்டு அதனை உங்களது விருப்பத்திற்குத் தேவையான வடிவில் கணணியில் வரைந்துகொள்ளலாம். இதனை எமக்குத் தேவையான பகுதியில் வைத்தால் அதன்மேலாக எலும்புத் திசுக்கள் வளரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்
பணம்:பணத்தைச் சுமந்து திரியும் கஷ்டத்தைப் போக்க உருவானதே கிரெடிட் கார்டு. அடுத்து, கிரெடிட் கார்டுக்கும் விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.கிரெடிட் அல்லது டெபிட் கார்டுக்குப் பதிலாக செல்போனாலேயே வருங்காலங்களில் பணம் செலுத்தலாம். அதுவும் செல்போனை பாக்கெட்டை விட்டு எடுக்காமலே.மின்னணு முறையில் பணம் செலுத்த உதவும் புதிய நிறுவனமான `ஸ்கொயர்’ இதை உருவாக்கியுள்ளது. இவர்கள் உருவாக்கியுள்ள செல்போன் அப்ளிக்கேஷனான `கார்டு கேஸ்’ மூலம் ஒருவர் பயன்படுத்தும் சேவை அல்லது வாங்கும் பொருட்களுக்கு ஆட்டோமேட்டிக்காக பணம் செலுத்தப்பட்டுவிடும்.“நீங்கள் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு உங்கள் பெயரை மட்டும் சொல்லிவிட்டு நடையைக் கட்டலாம். அது ஓர் இனிய `பேமண்ட் அனுபவமாக இருக்கும்” என்கிறார், `ஸ்கொயர்’இயக்குநர் மேகன் கின்.
லப்டாப்(laptop)இன் தம்பி றொல்டாப்(roltop)
விரும்பிய இடத்துக் கெல்லாம் எடுத்துச் செல்ல வசதியாக வகையில் அறிமுகமாகிறது பெயிண்ட் பூசும் உருளை வடிவில் மிகவும் கச்சிதமான முறையில் அமைக்கப்பட்ட ரோல்டோப்(roltop).17 அங்குல தொடுதிரை,ஸ்பீக்கேர்ஸ்,வெப்கம்,USP port,powercart என சகல வசதிகளும் நிறைந்ததாக உருவாக்கப் பட்டுள்ளது.கையடக்க கணனித் தேவையினை முழுமையாக தீர்த்து வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த றொல்டாப் இனி வரும்காலங்களில் மக்களை பெரிதும் கவரும் என தயாரிப்பாளர் எதிர்பார்க்கிறார்கள்.
ஜிமெயிலில் மேலும் புத்தம் புதிய வசதிகள் :கூகுள் தனது புதிய தளமான கூகுள் பிளசிற்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு வசதிகளை உருவாக்கி வருகிறது. இப்பொழுது ஜிமெயில் தளத்தில் மேலும் பல புதிய வசதிகளை புகுத்தி உள்ளது. இந்த புதிய வசதிகள் அனைத்தும் கூகுள் பிளஸ் தளத்தை பொறுத்தே அமைந்து உள்ளது. ஜிமெயிலில் இருந்தே உங்கள் வட்டத்தில் புதிய நண்பர்களை சேர்க்கலாம், கூகுள் பிளஸ் வட்டத்தை ஜிமெயில் contacts பகுதியில் பார்த்து கொள்ள மற்றும் ஜிமெயில் கான்டக்ட் ஆட்டோமேடிக் அப்டேட் போன்றவை.ஈமெயிலில் இருந்தே புதிய நண்பர்களை வட்டத்தில் சேர்க்க: உங்களுக்கு மற்றவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை படிக்கும் பொழுது அவரை பற்றிய விவரம் வலதுபுறம் இருப்பதை நாம் பார்த்து இருப்போம். இப்பொழுது அதில் கூடுதல் வசதியாக நேரடியாக இங்கிருந்தே அவரை கூகுள் பிளஸ் வட்டத்திற்குள் சேர்க்க Add to Circles என்ற வசதியை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய வசதியின் மூலம் உங்கள் மின்னஞ்சல் நண்பர்களை சுலபமாக கூகுள் பிளசில் தொடரலாம். மற்றும் இதில் அவர் கடைசியாக உங்களுக்கு பகிர்ந்த போஸ்ட்டும் காட்டும்.
ஜிமெயிலில் கூகுள் பிளஸ் Circles: இப்பொழுது ஜிமெயிலின் labels பகுதியில் Circle என்ற புதிய வசதி இருப்பதை பாருங்கள். அதில் கிளிக் செய்தால் கூகுள் பிளசில் நண்பர்களாக இருப்பவர்கள் உங்களுக்கு அனுப்பிய அனைத்து மின்னஞ்சல்களும் உங்களுக்கு வரும் மற்றும் வட்டத்தில் உள்ள ஒவ்வொரு catagory யாக கிளிக் செய்து பார்த்தல் அதில் உள்ளவர்கள் மட்டும் அனுப்பிய மின்னஞ்சல்கள் உங்கள் தனியே பிரித்து காட்டும். Circleக்கு அருகில் உள்ள Arrow லிங்க் கிளிக் செய்தால் உங்களின் category காண முடியும்.
ஜிமெயில் இருந்தே கூகுள் பிளசில் பகிர: உங்களின் மின்னஞ்சலில் உள்ள ஒளிப்படங்களை நேரடியாக கூகுள் பிளசில் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
தொடர்புகள் ஆட்டோமேட்டிக் அப்டேட்: கூகுள் கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் கைபேசி எண், தொடர்பு முகவரிகள் போன்றவற்றை மாற்றும் பொழுது அவைகள் நமக்கு ஆட்டோமேட்டிக் அப்டேட் ஆகி விடும். ஆதலால் அவர்களை எப்பொழுதும் நம் தொடர்பிலேயே வைத்து கொள்ள உதவுகிறது. இப்படி சில புதிய வசதிகளை கூகுள் தளம் உருவாக்கி உள்ளது.
0 comments:
Post a Comment