கனடாவில் கல்லூரிகளும்,பல்கலைக் கழகங்களும்.

ஒன்ராறியோவில் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இரண்டாம் நிலையின் பின்பான கல்வித் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ளன. கல்லூரிகள் பொதுவாகத் தனித்துறைப் பணி ஒன்றில் பிரயோகிக்கக் கூடிய கற்கை நெறித் திட்டங்களை வழங்குகின்றன. சில கல்லூரிகள் குறிப்பிட்ட சில கல்விப் பிரிவுகளில் கல்விச் சான்றிதழ் பெறுவதற்கு இட்டுச் செல்லும் பாடங்களை வழங்குகின்றன. பல்கலைக் கழகங்கள் உயர்கல்வி மற்றும் தொழில் துறை நிபுணத்துவம் தொடர்பான கல்வித் திட்டங்களில் தம் கவனத்தைக் குவிக்கின்றன. கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இளங்கலை (undergraduate) பட்டங்களை வழங்குகின்றன. அவற்றில் பல, பட்டதாரி (graduate) கல்வித் திட்டங்களையும் வழங்குகின்றன.

கல்லூரிகள்
பிரயோக கலைகள் மற்றும் தொழில் நுட்பத்துக்கான 24 கல்லூரிகள் ஒன்ராறியோவில் உள்ளன. இவற்றில் 2 பிரெஞ்சு மொழிக் கல்லூரிகளாக உள்ளன. இவை முழுநேர ரீதியிலும் பகுதிநேர ரீதியிலும் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் கல்வித் திட்டங்களை வழங்குகின்றன. உதாரணமாகச் சில கல்லூரிகள் தாதியர் பணித்துறையிலும் கணக்கியல் துறையிலும் சான்றிதழ் பெறுவதற்கு இட்டுச் செல்லும் பாடங்களை வழங்குகின்றன.வெவ்வேறு கல்வித் திட்டங்களின் காலநீட்சி வேறுபட்டபோதிலும் ஒரு சான்றிதழ் கல்வித் திட்டம் பொதுவாக 1 வருடம் அல்லது அதனிலும் குறைவான காலத்துக்கும் டிப்ளோமா கல்வித் திட்டம் 2 அல்லது 3 வருடங்களுக்கும் தொடர்ந்து நடைபெறலாம். பல கல்லூரிகளில் பிரயோக கற்கைப் பகுதிகளுக்கான இளநிலைப் பட்டங்களும் (bachelor degrees)வழங்கப்படுகின்றன.

கல்லூரிகளில் தொழில் துறைகளுக்குமுந்தியனவும் தொழில் அனுபவப் பயிற்சிசம்பந்தப்பட்டவையும் ஆன பயிற்சி, மொழிப் பயிற்சி மற்றும் திறன்களை உயர்த்துதல் ஆகியவற்றுக்கெனப் பாடங்கள் வழங்கப்படுகின்றன. ஒன்ராறியோவில் உள்ள கல்லூரிகளுக்கு உரிய கல்வித் திட்டங்களை அங்கீகரிப்பது மற்றும் அவற்றின் கொள்கை நிலைத் திசைகளை விருத்தி செய்வது போன்ற பணிகளை பயிற்சி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான ஒன்ராறியோ அமைச்சு (Ontario Ministry of Training, Colleges and Universities) (1) செய்து வருகிறது. மேலதிக தகவல் பெறுவதற்கு, சேவை ஒன்ராறியோ (ServiceOntario) அமைப்பினை அழையுங்கள்:

கட்டணம் இல்லாமல்: 1-800-267-8097
ரொறொன்ரொ: 416-326-1234
பல்கலைக்கழகங்கள்
ஒன்ராறியோவில் அரசு நிதியுதவியுடன் இயங்கி வரும் 19 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் பல பிரெஞ்சு மொழிப் பல்கலைக்கழகங்கள், இருமொழிப் பல்கலைக்கழகங்கள், முடிக்குரிய இராணுவக் கல்லூரி, கலை மற்றும் வடிவமைப்புக்கான ஒன்ராறியோ கல்லூரி ஆகியனவும் அடங்குகின்றன. எல்லாப் பல்கலைக் கழகங்களும் இளங்கலை /undergraduate (இளநிலை /bachelor) பட்டங்களை வழங்குகின்றன என்பதுடன்இவற்றில் பெரும்பாலானவை பட்டதாரிப் படிப்பு பட்டங்களையும் (முதுகலை மற்றும் கலைமானி / master's and doctoral) வழங்குகின்றன .

இளங்கலைப் பட்டப் படிப்பு பூரணமாவதற்கு வழக்கமாக 3 வருடங்கள் செல்லும். பட்டதாரிப்படிப்புத் திட்டத்துள் (graduate program) புகுவதற்கான அனுமதியைப் பெற விரும்பினால் நான்காவது "சிறப்பு" வருடப்படிப்பும் வழக்கமாகத் தேவைப்படுகிறது. முதுகலை மற்றும் கலைமானிக்கான பட்டப் படிப்புகள் (masters and doctoral degrees) நிறைவு பெறுவதற்கு இன்னும் மேலதிக வருடங்கள் தேவைப்படும். கற்கைத் திட்டத்தினைப் பொறுத்து இவற்றின் எண்ணிக்கை அமையும்.

பல பல்கலைக்கழகங்கள் மருத்துவம், பற்சிகிச்சை மற்றும் சட்டம் போன்ற தொழில்நிபுணத்துவ கல்வித் திட்டங்களையும் வழங்குகின்றன. சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று வருட இளங்கலைப் படிப்பின் பின்னரே மாணவர்கள் இத்தகைய கல்வித் திட்டங்களை ஆரம்பிக்கின்றனர்.

ஒன்ராறியோவில் உள்ள பல்கலைக்கழகங்கள் சுயாதீனமாக இயங்குகின்றன. பயிற்சி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அமைச்சிடம் இருந்து அவை நிதியுதவியைப் பெறுகின்ற பொழுதிலும் ஒவ்வொரு பல்கலைக் கழகமும் தனது சொந்தக் கல்வித் திட்டங்கள், அனுமதிகள் மற்றும் துறைப்பீடங்கள் போன்றவற்றை முறைமைப்படுத்தி வருகிறது.

ஒன்ராறியோ அரசு குறிப்பிட்ட இந்த உரிமையை வழங்கியிருந்தால் ஒழிய இங்குள்ள பல்கலைக் கழகங்கள் ஒன்ராறியோவில்எந்த ஒரு பட்டத்தினையும் வழங்க முடியாது.ஒன்ராறியோவில் இருந்து வரும் பிரத்தியேக கல்வி அமைப்புகள் சிலவற்றுக்கு பட்டம் வழங்கும் அதிகாரம் பகுதியான அளவில் வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறான பாடசாலைகள் மதப்பிரிவுச் சார்புடையவையாக (denominational) உள்ளன. அதாவதுஇவை மதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளன. தனியார் நிறுவனம் ஒன்றுக்கு இருக்கக் கூடிய பட்டம் வழங்கும் தகைமை பற்றி மேலும் தகவல் பெறுவதற்கு பயிற்சி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அமைச்சுடன் தொடர்பு கொள்ளுங்கள்:
தொலைபேசி: 416-325-2653

0 comments:

Post a Comment