சினிமா..கடந்த 30 நாட்களில் வந்த திரைப்படங்கள்.

2011-10-09 சதுரங்கம்
நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால், மணிவண்ணன்.  
கதை: ஒரு நிருபரின் வாழ்க்கையில் நடக்கும் சதுரங்க ஆட்டம்தான் கதை.
கருத்து: 2004-ல் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கின்றன என்றாலும் இந்த காலகட்டத்தில் நிறைய படங்களில் அவைகள் எல்லாம் வந்து விட்டதால் எதுவும் புதிதாய் தோன்றவில்லே.
புள்ளிகள்:30
2011-10-08 வெடி
நடிகர்கள்: விஷால், சமீரா ரெட்டி, விவேக்.
கதை: தொலைத்து விட்ட தன் தங்கையை தேடி யலையும் ஒரு அண்ணனின் கதை.
கருத்து: பொழுதுபோகலை என்றால் பார்க்கலாம்.
புள்ளிகள்:35
2011-10-08 முரன்
நடிகர்கள்: சேரன், பிரசன்னா,ஹரிபிரியா,ஜெயப்பிரகாஷ்.
கதை: வாழ்க்கை பயணத்தில் நாம் சந்திக்கும் முரண்பட்ட மனிதர்களை பற்றிய கதை.
கருத்து: முரண் பட்ட மனிதர்களை முடித்தால்,முடிவாக எஞ்சுவது உலகில் ஒருவனே!ஏற்றுக் கொள்ள முடியாத கதை.
புள்ளிகள்:45
2011-10-03 ஆயிரம் விளக்கு
நடிகர்கள்: சாந்தனு, சுமன், சத்யராஜ், டெல்லி கணேஷ்.கஞ்சாகருப்பு.
கதை: அப்பா-மகன் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் கதை.
கருத்து: ஆயிரம் விளக்கு - பிரகாசமில்லை!
புள்ளிகள்:30
2011-10-03 வாகை சூட வா
நடிகர்கள்: விமல்,இனியா, பாக்யராஜ்.
கதை: 1966-ல் அரசு வேலை என்பது எட்டாக்கனியாக இருந்த காலகட்டதில் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து ஒரு கிராமத்தில் நடக்கும் கதை.
கருத்து: தரமான திரைப்படம்.
புள்ளிகள்:80
2011-09-18 எங்கேயும் எப்போதும்
நடிகர்கள்: ஜெய், அஞ்சலி.
கதை: சற்றும் சிந்திக்காத அவசரம் மனிதனின் வாழ்வையே மாற்றிவிடுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்.
கருத்து: நீண்ட காலங்களின் பின் பாடம் சொல்லும் படம்.
புள்ளிகள்:80
2011-09-18 வந்தான் வென்றான்
நடிகர்கள்: ஜீவா, டாப்சி பன்னு , சந்தானம்.
கதை: தனக்கென பயணத்தை தீர்மானித்து விட்டுச் செல்லும் ஒருவனுக்கு ஏற்படும் தடைகளும், அதை வெல்வதும்தான் கதை.
கருத்து: எதோ வந்தானாம்,போனானாம்.
புள்ளிகள்:35
2011-09-17 மங்காத்தா
நடிகர்கள்: அஜித், ஜெயப்பிரகாஷ், த்ரிஷா, அர்ஜுன்.
கதை: ஒரு கொள்ளைக்கும்பல், ] வங்கியிலிருந்து தங்ககட்டிகளை கொள்ளையடிக்கிறது.
ஏமாற்றப்பட்டவர்கள் மீண்டும் தங்ககட்டிகளை எப்படி கைகப்பற்றுகிறார்கள் என்பதே கதை.
கருத்து: ஒரு தடவ பார்க்கலாம். சுமார் ரகம்.
புள்ளிகள்:50
2011-09-17 யுவன் யுவதி
நடிகர்கள்: பரத்,ரீமா,சந்தானம்.
கதை: உசிலம்பட்டி கலாசாரத்தில் இருந்து நழுவி அமெரிக்காவுக்குச் சென்று நவீன வாழ்க்கையை வாழ ஆசைப்படும் பரத்.இருவருக்குள்ளும் நடக்கும் காதல் விளையாட்டுகளே 'யுவன் யுவதி.
கருத்து: மொத்தத்தில் "யுவன் யுவதி", ரசிகர்கள் கொடுக்கும் காசுக்கு "பலன் பாதி!"
புள்ளிகள்:40
2011-09-17 முதல் இடம்
நடிகர்கள்: விதார்த், கவிதா நாயர், மயில்சாமி.
கதை: ஒரு லோக்கல் ரவுடி கிரிமினல் பட்டியலில் முதல் இடத்தில் வரத் துடிக்கும் வாலிபரின் கதை.
கருத்து: முதலிடம் இவ்வருடத்தின் கடைசியிடம்.
புள்ளிகள்:25
2011-09-17 வெங்காயம்
நடிகர்கள்: அலெக்சாண்டர், பவீனா, சத்யராஜ்
கதை: போலிச் சாமிமாரின் தோலை உரித்துக்
காட்டும் கதை.
கருத்து: மூட நம்பிக்கைகள் மலிந்த நிலத்தில் ஒரு துணிச்சலான திரைக்கதை.:
புள்ளிகள்:60

0 comments:

Post a Comment