ஐரோப்பாவிலிருந்து கடந்த கோடை காலத்தினை டொரோண்டோ-கனடாவில் நம் உறவுகளோடும்,நண்பர்களோடும் ஒரு மாதம் உல்லாசமாக கழித்து வந்தேன்.அங்கு தங்கி இருக்கும் வேளையில் ஒருநாள் பஸ்சுக்காக தரிப்பு ஒன்றில் என் நண்பியுடன் காத்துநின்றேன்.அவ்வேளையில் நடைபாதையில் நான்கு இளம் பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர்.அவர்களுள் ஒருத்தி தமிழ் போல் தோன்றவே எனது சந்தேகத்தினை என் நண்பியிடம் தெரிவித்தேன்.அவளும் என்னிடம் "கொஞ்சம் பொறு.அவர்கள் நால்வரும் எம்மை விலத்திச் சென்றபின்,அவள் எம்மை திரும்பிப் பார்த்தாளாயின் நிச்சயமாக அவள் தமிழ்தான்"என்று கூறினாள்.என்ன ஆச்சரியம்!அவள் கூறியபடியே நடந்தது.
---- -கனகா-மோகன்,ஜெர்மனி
No comments:
Post a Comment