ஒளிர்வு-(12) ஐப்பசித்திங்கள்...................... ............................ சிந்தனை ஒளி:

Ø  ஒருவர் சுமையை இன்னொருவர் வாங்கிக்கொள்கிற மனப்பக்குவம்தான் மணவாழ்க்கையின் உயிர்நாடி.
Ø  மனிதவாழ்க்கை மலருவது ஒரே முறைதான், அந்த ஒரே வாழ்க்கையை, ஒரே உயிருக்கே, கொடுத்து வாழ வேண்டும்..
Ø  பேய்க்கு வாழ்க்கைப்பட்டபின் "புளியமரத்தில் ஏறு", என்றால் ஏறித்தான் ஆகவேண்டும்.
Ø  காதல் என்பது பூவைப் போன்றது, ஒரு மரத்தில் பூக்கின்ற எல்லாப் பூக்களும் காய்ப்பதில்லை, ஏராளமானவை பூவாகவே உதிர்ந்துவிடும்.
Ø  நினைத்தவுடன் திரும்பக்கூடிய இடமென்றால், யோசிக்காமல் கால் வைக்கலாம் -ஆனால் போனால் திரும்பவே முடியாத இடமென்றால், நன்றாக யோசித்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.
Ø  ஒரு பெண், தன் அழுத்தமான பொறுமையினால்,ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்கலாம், தன் அடங்காபிடாரித் தனத்தாலே அதை அழித்து, வாழ்க்கையை நிர்மூலமாக்கிக்கொள்ள வேண்டியும் ஏற்படலாம்.
Ø  நீந்தி பார் கடலின் ஆழம் தெரியும். போராடி பார் வாழ்கை இன் அர்த்தம் புரியும்.
Ø  அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது.. நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது.
Ø  ஒரு துளி கண்ணீரை துடைப்பது நட்பு அல்ல.. மறு துளி கண்ணீர் வராமல் தடுப்பதுதான் உண்மயான நட்பு.
Ø  வெற்றியை விரும்பும் நமக்கு தோல்வியை தாங்கும் மனம் இல்லை. தோல்வியை தாங்கும் மனம் இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.
Ø  வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். அதற்குமுன்  ………. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் வாழ்ந்து பார்!
Ø  நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும். ஆனால்…… நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்.
Ø  குறை இல்லாத மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை..
Ø  சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Ø  வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது, முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்!



நாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன?......(02)

ஐரோப்பாவிலிருந்து கடந்த கோடை காலத்தினை டொரோண்டோ-கனடாவில் நம் உறவுகளோடும்,நண்பர்களோடும் ஒரு மாதம் உல்லாசமாக கழித்து வந்தேன்.அங்கு தங்கி இருக்கும் வேளையில் ஒருநாள் பஸ்சுக்காக தரிப்பு ஒன்றில் என் நண்பியுடன் காத்துநின்றேன்.அவ்வேளையில் நடைபாதையில் நான்கு இளம் பெண்கள் நடந்து வந்துகொண்டிருந்தனர்.அவர்களுள் ஒருத்தி தமிழ் போல் தோன்றவே எனது சந்தேகத்தினை என் நண்பியிடம்  தெரிவித்தேன்.அவளும் என்னிடம் "கொஞ்சம் பொறு.அவர்கள் நால்வரும் எம்மை விலத்திச் சென்றபின்,அவள் எம்மை திரும்பிப் பார்த்தாளாயின் நிச்சயமாக அவள் தமிழ்தான்"என்று  கூறினாள்.என்ன ஆச்சரியம்!அவள் கூறியபடியே நடந்தது.
               ---- -கனகா-மோகன்,ஜெர்மனி

தன்னம்பிக்கை

ஒருவர் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அதை நான் எப்படி அடக்கி சரி செய்வதென்று ஞானியிடம் கேட்டார்.
அவர், “உன்னிடம் இருக்கின்ற அந்த கோபத்தை என்னிடம் காட்டு பார்க்கலாம் என்றார்.
இப்பொழுது என்னால் அதை காட்ட முடியாது
சரி, எப்பொழுது என்னிடம் காட்ட முடியும்
அது தானே எதிர்பாராமல் வருகிறது
அது இயல்பானது, உண்மையானது என்றால், அதை எந்தச் சமயத்திலும் என்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது இல்லாததது பெற்றோர்களும் உன்னிடம் கொடுக்காதது எப்படி உன்னிடம் வந்தது நன்றாக யோசனை பண்ணிப்பார் என்றார் ஞானி.
எதிர்பார்ப்பானது ஏமாற்றத்தில் முடியும் போதுதான் கோபம் உண்டாகிறது என்பதை உணர்ந்தான். எதிர்பார்ப்பை குறைத்தான் ஏமாற்றம் இல்லாமல் கோபமும் போயே போச்சு.
எதிர்பார்ப்பை குறைத்தால் கோபம் இல்லை.

சீனாவின் அவித்த முட்டை

சிறுவர்களின் சிறுநீரில் அவிக்கப்பட்ட முட்டைகளை உலகம் பூராவும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு உள்ளது சீனா. சீனாவில் வசந்த கால பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றமை வழக்கம். ஆனால் செஜிஆங் மாகாணத்தின் டொங்யாங் நகரத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்பண்டிகை மிகவும் வித்தியாசமான முறையில் இவ் முட்டைகளை சாப்பிட்டுக்  கொண்டாடப்படுகின்றது.
முட்டைகளை பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் சிறுநீரில் அவித்து உண்கின்றார்கள். பாடசாலைகள் தோறும் பாத்திரங்கள், வாளிகள் போன்றவற்றில் சிறுவர்களின் சிறுநீர் சேகரிக்கப்படுகின்றது. சிறுவர்களின் சிறுநீரில் அவிக்கப்படுகின்ற முட்டைகள் மிகவும் சுவையானவை என்று சீனர்கள் கூறுகின்றனர்.
10 முட்டைகளை ஒரு நாளில் சாப்பிடுகின்றபோதிலும் அவா அடங்காதாம்.
இம்முட்டைகள் ஆரோக்கியத்துக்கும் மிகுந்த நன்மைகள் கொடுக்கும் என்கின்றனர். சீனாவின் பாரம்பரிய மருத்துவ நிபுணர்களின் கருத்துப்படி இம்முட்டைகள் கோடை காலத்தில் உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்க உதவும். அத்துடன் இரத்த சுற்றோட்டத்தை சீராக்கும். எனவே இம்முட்டைகளை உலக மக்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க சீனா தீர்மானித்து உள்ளது. சீ................... னா!

விஞ்ஞானம்

`தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்ன? விஞ்ஞானிகள் விளக்கம்.!
ஒரு விந்தையான வியாதி- `சோம்னாம்புலிஸம் எனப்படும் தூக்கத்தில் நடக்கும் நோய். `குரோமோசோம் குறைபாடே இந்நோய்க்குக் காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் `மரபணு சங்கேதக் குறியீட்டை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அந்த சர்வதேச ஆய்வுக் குழு, தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறு கிறது. ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அந்தக் குறைபாடான டி.என்.ஏ.யின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக் கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய் வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள், பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக (!) கொண்டிருந்தாள்.
அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், `குரோமோசோம் 20-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த `ஜீன்’ இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தங்களின் கண்டுபிடிப்பு, தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்.

கணணி நுட்பம்

கண்ணாடியில்லாமல் வாசிக்கப் பழக்கும் அரிய மென்பொருள்!
iPhone மற்றும் கணினியைப் பார்ப்பதில் அதிக நேரம் செலவழிப்பது ஒருவரது கண்களைப்  பழுதாக்குகின்றன என்று தான் பொதுவாகக் கூறப்படும். ஆனால் அவை ஒருவரது கண்களின் பார்வையை முன்னேற்றுகின்றன என்று கூறப்படுவது புதிய விடயந்தான். நடுத்தர வயதானவர்களின் பார்வையை இன்னும் 10 வயது குறைத்து நன்றாகத் தோற்றமளிக்கச் செய்யும் ஒரு மூளைப்பயிற்சி மென்பொருளாக இது இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கண்ணாடி பயன்படுத்தி வாசிப்பவர்களால் அதன் பாவனையைக் குறைக்க முடியும் என்று கூறுகின்றனர்.

GlassesOff என்ற மென்பொருளின் பரீட்சார்த்தமானது அதிசயிக்கத்தக்க விளைவுகளைத் தந்துள்ளது என நம்பப்படுகிறது. பயிற்சியின் பின்னர் கண்ணாடி பயன்படுத்துபவர்களால் 2 வரிகளுக்கும் மேலாகக் கண்ணாடியில்லாமல் வாசிக்கமுடிகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மென்பொருள் அடுத்த வருடத்தின் முற்பகுதியில் வெளிவிடப்படவுள்ளது. ஆரம்பத்தில் கையடக்கத் தொலைபேசி மென்பொருளாகவே வருமென்றும் அதன்பின்னரே கணினிகளுக்கென இவை வெளியிடப்படும் என்றும் கூறப்படுகின்றது. இந்த மென்பொருள் அமெரிக்க நிறுவனமான Ucansi இனால் உருவாக்கப்படுகின்றது. இது மூளையைத் தூண்டிவிடுகின்றது. இதில் முதலில் ஒரு சாம்பல்நிறத் திரையைப் பார்க்கலாம். அதில் ஒரு வெள்ளை வட்டம் இருக்கும். அடுத்து விரைவாகப் பல இடங்களில் பல விம்பங்கள் தோன்றும். இவற்றில் சில வெற்றிடமாகவும் சில கலங்கலான கோட்டுவடிவங்களாகவும் இருக்கும். இதன் இலக்கு வெற்றிடமான விம்பங்களைத் தெரிந்தெடுத்து அந்த வட்டத்தில் வைப்பதுதான்.

ஒருவர் நன்றாகச் செயற்படச் செயற்பட இப்பணி வேகமாகவும் சிரமமானதாகவும் மாறும். கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இந்தப் பரீட்சார்த்தத்தில் சராசரி 51 வயதானவர்கள் 40 பாடங்களில் பங்குபற்றினார்கள். முதல் 3 மாதங்களுக்கும் இதன் விலை 60 பவுண்களாக இருக்கும் என அந் நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் வாரத்தில் 3 தடவைகள் 15 நிமிடங்களிற்கு ஒரு வாடிக்கையாளர் பயிற்சியளிக்கப்படுவார். அதன்பின்னர் இதன் கட்டணம் மாதாந்தமாக இருக்கும். பிரித்தானியர்கள் வழமையாக ஒரு வருடத்தில் கட்பார்வை உற்பத்திகளுக்காக 2.7 பில்லியன் பவுண்களைச் செலவழிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது