பிரான்ஸில் ம. பாஸ்க்கர் அவர்களது இயக்கத்தில் வெளிவந்த ” தீராநதி” என்ற முழுநீள திரைப்படம் பிரான்ஸ், கனடா திரையங்குகளில் சக்கை போடு போடுகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் திரு. பி.எல். தேனப்பன் அவர்களது தயாரிப்பில் பலரது கவனத்தை ஈர்த்த “Eclose” என்ற குறும்படத்தை இயக்கிய ம. பாஸ்க்கர் அவர்கள் ஏற்கனவே பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களில் தனது குறும் படங்களால் பல அவார்டுகளை தட்டிக்கொண்டதோடு தன்னால் ஒரு விறுவிறுப்பான முழுநீள திரைப்படத்தை தர முடியும் என்பதை “தீராநதி” மூலம் நிரூபித்து இருக்கிறார்.புதியவகை திரைக்கதை உத்தியை கையாண்டு ஒரு விறுவிறுப்பான முறையில் ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தை ரசிக்க கூடிய வகையிலும் இயக்கி மக்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார். கதைப்படி புலம்பெயர்ந்து விசா கிடையாது அவதிப்படும் பாஸ்கருக்கு என்ன ஆனது? ,ஈழப்போரில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட பெண் மதனா
பாஸ்க்கர் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா? இக்காதலை எமது சமுதாயம் ஏற்றுக் கொண்டதா?என்பது தான் மீதி கதை. கதை எங்கேயுமே தொய்வு இல்லமால் விறுவிறுப்பாக செல்கிறது. அடுத்து என்ன என்பதை யோசிக்க வைக்கும் விதத்தில் இது இயக்குனரின் முதல் படம் என்று சொல்ல முடியவில்லை.குழப்பமில்லாமல் அழகாக கதையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ..
கவிநாத்தின் கேமரா அழகாக பாரீஸ் நகரை காண்பிப்பதுடன் படத்துக்கு கூடுதல் ப்ளஸ் ஆக அமைகிறது. . சங்கரின் விறு விறு எடிடிங், றொபேட் அவர்களின் வண்ணக்கலவை, விஷுவல் எபக்ட் , கஜி அவர்களின் காதை கிழிக்காத மெல்லிய இசை, கஜன் அவர்களின் குரலின் இனிமை இந்த பாடல் வரிகளுடன் சேர்ந்து படத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.
சதா பிரணவனின் பாடல் வரிகள், சுஜித் ஜி அவர்களின் டைடில் பாடல், விஜிதனின் கிராபிக் டிசைன்ஸ் போன்றன படத்தின் சிறப்பு அம்சங்கள். ஈழ தேசத்து யாழ்ப்பான தமிழ் உரையாடல் படத்தின் மெகா பிளஸ். கேசவன் அவர்கள்
இணை இயக்கம் ! தயாரிப்பு – எழுத்து – இயக்கம் – , நடிப்பு ம.பாஸ்கர் தீராநதி ஒரு வெற்றி படம் என்பதில் சந்தேகம் இல்லை.
No comments:
Post a Comment