சினிமா..கடந்த 30 நாட்களில் வந்த திரைப்படங்கள்.

2011-08-23 உயர்திரு 420
 நடிகர்கள்: சினேகன், மேக்னா நாயுடு, ஜெயப்பிரகாஷ்.
 கதை: வெறும் 420தாக இருக்கிற ஒருத்தன் எப்படி உயர்திரு 420 ஆகிறான்ங்கிறதுதான் கதை.
 புள்ளிகள்:45
2011-08-23 சகாக்கள்
நடிகர்கள்: சஞ்சீவ், அத்வைதா, ஜெயப்பிரகாஷ்.
 கதை: பழனிக்கு பாதயாத்திரை போகும் குழுவினரில் இருவருக்குள் ஏற்படும் காதல் அவர்களின் சகாக்களுக்கு இடையிலான அன்பு, பிரிவு பிரச்சினைகள் போன்றவற்றை விவரிப்பதுதான் இப்படத்தின் கதை.
கருத்து: வித்தியாசமான கதை
 புள்ளிகள்:50
2011-08-23 கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை
நடிகர்கள்: தேஜ்,கீத்திகா.
 கதை: வயது கோளாறில் ஏற்படும் காதல், அந்த காதலினால் உண்டாகிறது கலவரம். இந்த கலவரத்திற்கு இரையாகும் இரண்டு உயிர்கள் என மனிதர்களால் பிரிக்கப்படும் காதலர்களை, காலம் எப்படி ஒன்று சேர்க்கிறது என்பதுதான் கதை.
       கருத்து: முதல் பாதியில் எதார்த்தமாய் காதல் கதை சொல்லி விட்டு பின் பாதியில் குழப்பமான மன நிலையில் எழுதப்பட்ட திரைக்கதையால் வெற்றியை மயிரிழையில் தவற விட்டுட்டார் அறிமுக இயக்குநர்
 புள்ளிகள்:30
2011-08-14 ரௌத்திரம்
நடிகர்கள்: ஜீவா,ஸ்ரேயா,பிரகாஷ்ராஜ், கௌரி.
 கதை: பிறருக்கு துன்பமெனில் 'ரௌத்திரம்' பழகுவதில் தவறில்லை என்ற மையக்கருத்தை கருவாக வைத்து உருவான கதை.
கருத்து: இயற்கையான வசனங்களும்,நடிப்பும் இணைந்துள்ளன.
 புள்ளிகள்:50
2011-08-14 டூ
நடிகர்கள்: சஞ்சய், நட்சத்திரா, சங்கீதா பட், ஊர்வசி.
 கதை: காதலர்களுக்குள் ஏற்படற கருத்து வேற்றுமைகள், ஊடல்கள், சின்ன சின்ன சண்டைகள், தற்காலிகப்பிரிவுகள் நிரந்தரம் அல்ல என்பதை சொல்லும் கதை.
கருத்து: கண்ணியமாக, குடும்ப உறவுகளோடு அமர்ந்து பார்க்கும்படி யான படம்
 புள்ளிகள்:55
2011-08-14 போடிநாயகனூர் கணேசன்
நடிகர்கள்: ஹரிகுமார், அருந்ததி, சாய் ரவி,சூரி.
 கதை: பன்னி மேய்க்கிற ஒரு வில்லனுக்கும், 'தண்ணி' விற்கிற ஹீரோவுக்கும் இடையே நடக்கும் மோதல்தான் கதை.
கருத்து: ஏற்கனவே அரைத்த மா க்களின் கலப்பு.
 புள்ளிகள்:30
2011-08-14 கருங்காலி
நடிகர்கள்: மு.களஞ்சியம், அஞ்சலி.
 கதை: இளம் தம்பதிகள் மத்தியில் இன்றைக்கு இருக்கும் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் கதை.
கருத்து: கதை சுற்றுகிறது
 புள்ளிகள்:35

No comments:

Post a Comment