ஒளிர்வு-(11)- புரட்டாதி த்திங்கள்.



சிந்தனை ஒளி:
நாம் வாயைத் திறக்கும் பொழுதெல்லாம்  உள்ளத்தை திறக்கிறோம்.
இன்றைய நாளை இறுகப் பற்றிக் கொள், நாளை நாளைப் பற்றி அதிகம் நம்ப வேண்டாம்.
யார் யார் எதில் உயர்ந்தவர் என்பது இறப்பிற்கு பின்னே தெரியும்.
மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையில் உள்ள முட்டையைப் போன்றது.
துணிவுடன் எதையும் செய், அதன் தன்மையில் புது அர்த்தங்கள் மலரும்.
வாதாடப் பலருக்குத் தெரியும், உரையாடுவது சிலருக்குத் தான் தெரியும்.
                  -to contact..manuventhan@hotmail.com

நாம் தமிழர் மத்தியில் நடப்பது என்ன?......(01)



ரொரொண்டோ   நகரில் பெருகி நிற்கும் ஆலயங்களில் மத்தியில்  ஒரு காளியம்மன் ஆலயம்.தேர்த்திருவிழாவுக்கு முதன்நாள் இரவு சப்பறத் திருவிழா வுக்கு சென்று வீடு திரும்பிய நான் என்னுடைய முக்கிய அடையாள அட்டையினை  கைப்பையுடன் ஆலயத்தில் தவற விட்டதனை உணர்ந்தேன்.மறுநாள் அதிகாலையில் ஆலயம் சென்று விசாரித்தபோது,தாம் பிஸி,பின்னர் வரும்படி என்னைதிருப்பி அனுப்பினர்.இரண்டு நாட்கள் கழிந்தபின்னர் அங்கு நான் சென்றபோதும்,இதே பதிலை வழங்கினர்.நம்பிக்கையினை இழந்த நான் அவ் அடையாள அட்டைக்குரிய அலுவலகம் சென்று,இலவசமாக விண்ணப்பித்து,தற்காலிக அட்டையுடன் வீடு வந்து சேர்ந்தேன்.மூன்று வாரங்களில் மேற்படி ஆலயத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் எனதுகைப்பையையும்,அடையாள அட்டையையும்,கிடைத்துள்ளதாகவும்,வந்து பெற்றுக்கொள்ளும்
படியும் கேட்டு இருந்தார்கள்.மகிழ்ச்சியுடன் சென்ற என்னிடம்,பதிலாக 500 டொலர் காசு கொடுங்கள் அல்லது 1500  டொலர் பெறுமதியான பூசை   ஒன்றை எடுத்துச் செய்யுங்கள் என்று கோரினர்.
திகைத்து நின்ற என்னிடம் தொலைபேசி இலக்கத்தினை வாங்கி என் பொருளைத் தந்து விட்டனர்.
  ""அர்த்தமுள்ள இந்து மதம் என்னசொன்னது?"".....................சிவமணி,சிவப்பிரகாசம்.

மனிதனே……….வெற்றி நிச்சயம்



-------------------------------------------கவிஞர் ஞானசித்தன்
உன்
கண்ணாடி மனதில்
கவலைகளெனும் தூசி
படியாமல் பார்த்துக்கொள்

உன்
இரும்பு நெஞ்சத்தில்
சோம்பலெனும் துரு
பிடிக்காமல் பார்த்துக்கொள்

உன்
தெளிந்த சிந்தனை ஓட்டத்தில்
எதிர்மறைஎண்ணங்களான
பாசி படராமல் பார்த்துக்கொள்

உன்
வெள்ளை மனதில்
கர்வமெனும் கறைசேராமல்
பார்த்துக்கொள்

சோம்பலை சாம்பலாக்கு
அலைபாயும் மனதை அடக்கு
முடங்கி கிடக்கும்
உன் திறமையை முடுக்கிவிடு
கட்டிக்கிடக்கும்
உன் ஆற்றலை கட்டவிழ்த்து விடு
வெற்றி நிச்சயம்.

மனிதனின் சிரிப்பின் வகைகள் :




ஓடவிட்டு சிரிப்பவன் வஞ்சகக்காரன்
மோகத்தில் சிரிப்பவன் வெறியன்
ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்
இடம் பார்த்துச் சிரிப்பவன் எத்தன்
கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்
மகிமையில் சிரிப்பவன் மன்னன்
தெரியாமல் சிரிப்பவன் பசப்பாளி
தெரியாது என்று சிரிப்பவன் நடிகன்
இருக்கும் இடம் எல்லாம் சிரிப்பவன் கோமாளி
கண் பார்த்துச் சிரிப்பவன் கஞ்சன்
சண்டையில் சிரிப்பவன் வன்முறையாளன்
இழவு கண்டுசிரிப்பவன் அரக்கன்
துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்

கடவுள் தத்துவம்


இறைவன் என்பவன் கருப்பா? சிவப்பா? இருக்கிறானா? இல்லையா? என்ற தர்க்கத்திற்கு முன்னதாக நான் கூறும் சிறிய விளக்கம் என்னவென்றால் எங்கே உங்களுடைய பொறுக்கும் திறன்) உடைபடுகிறதோ, எங்கே உங்களின் இயலாமை தலை காட்ட ஆரம்பிக்கிறதோ, எப்போது இது நம்மால் முடியாது அல்லது ஆகாத விஷயம் என்று எதை நினைக்கிறமோ அங்கே அந்த சூழ்நிலையில் உங்கள் முன்னால் காணும் எந்த பொருளும் அல்லது உருவமும் ‘கடவுளே!
உதாரணமாக, ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து பில்லுக்கு பணம் கொடுக்கும் போது உங்களது பர்சை காணவில்லை. ஐயோ! பெரிய அசிங்கம் என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்கும்போது யாரோ ஒருவர் உங்களுக்கு சம்பந்தமில்லாதவர் வந்து உங்களது பில்லுக்கு பணம் கட்டினால் இத்தருணத்தில் இவர் கடவுள்.
சுட்டெரிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் நடந்து செல்லும் மனிதன் தண்ணீர் தாகம் எடுத்து தொண்டை அடைக்கும் நேரத்தில் ஒருவர் தனக்கு வைத்திருந்த தண்ணீரை உனக்கு கொடுத்தால் அந்த தருணத்தில் அவர் கடவுள.;
ரோட்டில் அடிபட்டு இரத்தம் சொட்டசொட்ட உயிரை இழக்கப் போகும் மனிதன் தன்னை யாராவது தூக்கிசென்று மருத்துவமனையில் சேர்த்தால் உயிர் பிழைக்கலாம் என்ற நிலையில் யாரோ ஒருவர் தன் சகோதரனைப்போல தூக்கி சென்று அவன் உயிரை காப்பாற்ற உதவும் இந்த மனிதன் கடவுள்.
கவிஞர் வைரமுத்து சொன்னது போல உன் கண்ணால் பிறருக்கு அழுதால் ஆனந்தம் இவைகளையெல்லாம் வெறும் மனித நேயம் என்று ஒரு வரியில் சொல்லக்கூடாது. தினமும் சுவாகிக்கும் காற்று கடவுள.;
உண்ணும் உணவு, குடிக்கும் நீர் கடவுள்.
பஞ்ச பூதங்களே கடவுள்.

எங்கே தான் என்ற அகங்காரம் அடித்து நொறுக்கப்படுகிறதோ எந்த சூழ்நிலையில் மனிதன் தன் நிலையை உணர்ந்து நம்மால் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று புலம்புகிறானோ அந்த தருணத்தில் அவனுக்கு தரப்படும் சந்தர்ப்பங்களிலிருந்து பொருள்களிலிருந்து எல்லாமே கடவுள் தான். இதுவே “இறை. இப்படிப்பட்ட இந்த இறையை உணராமல் “தான் தான் பெரியவன் என்று பகுத்தறிவு மூடி வாழும் மனிதர்களின் புரையோடிய கண்களுக்கு இந்த இறை என்பது வெறும் கடை சரக்குதான்.
கடவுளின் படைப்பில் நல்லதும், கெட்டதும் சேர்ந்தே பிறக்கிறது. மனிதனின் வாழ்வில் நல்லவைகளை சீர்தூக்கி பாத்து கெட்டவைகளை புறத்தில் தள்ளி வாழமுடியாமல் போனதன் காரணம் என்ன? நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்கள் என்று ஒன்றும் கிடையாது. நாம் எடுத்துக்கொள்ளும் விதம் தான் அப்படி நல்லதாகப் பார்த்தால் நல்லது கெட்டதாகப் பார்த்தால் கெட்டது என்று பல சிந்தனையாளர்கள் கூறுகின்ற இந்த கூற்று உண்மைதானா? மனதிலும் உடலிலும் வலி ஏற்படுத்தும் விஷயங்கள் கெட்டவை என்றும் அதே மனம,; உடல் சந்தோஷப்பட்டால் அது நல்லது என்றும் எடுத்துக்கொள்ளலாமா?
வறியவன் ஒருவனுக்கு உணவு கொடுப்பதிலும்,
கல்வி பெற இயலாத பிஞ்சு உள்ளத்திற்கு கல்வி அளிக்கும்போதும்,
முதுமையில் தட்டு தடுமாறி வாழ்வின் கடைசி முடி எங்கே என்று தேடும் வயோதிகர்களுக்கு உதவி செய்யும் போதும்,
இல்லை என்று வருந்தும் வயிற்றுக்கு சோறு போடும் போதும்
மனிதனுள்  கடவுள்  சஞ்சரிக்கின்றான்.
மது அருந்தும் போதும் புகை பிடிக்கும் போதும் புகையிலை உண்ணும் போதும் மனம் மகிழ்ச்சி அடைகிறதே! ஏதோ ஒரு சக்தி கிடைத்து விட்டதாக நினைக்கிறதே! வேலை பளு குறைந்து ரிலாக்ஸ் என்ற தத்துவத்தை தருகிறது. டென்சன் குறைந்து நார்மலாக வேலை பார்க்க முடியும் என்ற புத்துணர்ச்சியை தருகிறது. இவைகள் போதை வஸ்த்துக்கள், தொடர்ந்து உபயோகித்தால் உன் வாழ்வு விணாகிப் போய்விடும் என்று சொன்னாலும் அது அறிவில் எட்டாமல் மனம் சந்தோஷப்படும் நிலையைத்தானே காண்கிறது. இதில் துன்பம் வரவில்லையே இது போன்ற தீய பழக்க வழக்கங்களினால் உடலில் பல நோய்கள் வந்து விரைவில் மரணம் ஏற்படும் என்று கூறுகின்ற அறிவியல் கூட சில விஷயத்தில் தடம் புரளுகிறதே. எந்தவித போதை பழக்கமும் இல்லாத மனிதனுக்கும் கேன்ஷர் போன்ற கொடிய வியாதிகள் வருவதை அறிவியல் உலகம் படம் போட்டு காட்டுகிறதே! பழக்கத்தினால் பாதிக்கப்பட்டவர் என்று ஒரு பெரிய பட்டியல், பழக்கமில்லாதோர் இதே பாதிப்பால் பாதிக்கப்பட்டவர் என்று ஓர் பட்டியல் இப்படித்தான் இருக்கிறது. இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது இன்பம் என்பதும், துன்பம் என்பதும் நமது வாழ்க்கை முறைகளை மட்டுமே வைத்து வரையறுக்கப்பட்டதாகத் தெரியாமல் வேறு ஏதோ ஒன்று நம்மை ஆட்கொண்டு அதன் படியேதான் நம் வாழ்க்கை செல்வது போல தெரிகிறது அப்படித்தானே!
 மனிதனின் பிறப்பில் முதல் வினாடியே இவனது இன்ப துன்பங்கள் வரையறுக்கப்பட்டு பிறக்கிறான். இந்த பிறப்பில் இவன் செய்கின்ற காரியங்கள் இப்பிறவிக்கு அல்ல என்ற சித்தாந்தம் உண்மை என்றுதான் உணர வேண்டும் போல இருக்கிறது. அப்படியானால் கண் மூடிக்கொண்டு எதையும் ஆராயாமல் நல்லது கெட்டது என்று பாகுபாடு பாராமல் மனிதன் காரியங்கள் செய்யலாமா? செய்யமுடிகிறதா? இல்லையே! தவறை செய்யும் ஒவ்வொரு மனிதனும் இது தவறு என்று தெரிந்து செய்வதும் நல்லது செய்யும் போது இது நல்லது என்று தெரிந்து செய்வதும் இயற்கையான உண்மை தவறோ சரியோ அதை பலமுறை செய்யும்போது அது பழகிப்போய்விடுவதும் இயற்கையே. இப்படி எந்த செயலிற்கும் காரணமில்லாமல் எல்லாமே விதி என்று மனிதன் வாழ முற்பட்டால் இந்த பூமியின் இயக்கம் இருக்குமா!
~~படைத்தவன் இருக்கான் பார்த்துக் கொள்வான் பயணத்தை தொடர்ந்து விடு||
என்ற கவிஞனின் வார்த்தை,அவன் இருக்கிறான் தானே என்றுவிட்டு பயணத்தை தொடராது இருந்தால் நாம் எட்டவேண்டிய  இலட்சியத்தினை அடைந்திடமுடியாது என்பதனைத்   மறை முகமாக   கூறுகிறது.  

ஈழத்து சினிமா விமர்சனம்:--"தீராநதி”

  பிரான்ஸில் . பாஸ்க்கர் அவர்களது இயக்கத்தில் வெளிவந்ததீராநதி என்ற முழுநீள திரைப்படம் பிரான்ஸ், கனடா திரையங்குகளில் சக்கை போடு போடுகிறது. கான்ஸ் திரைப்பட விழாவில் திரு. பி.எல். தேனப்பன் அவர்களது தயாரிப்பில் பலரது கவனத்தை ஈர்த்த “Eclose” என்ற குறும்படத்தை இயக்கிய . பாஸ்க்கர் அவர்கள் ஏற்கனவே பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களில் தனது குறும் படங்களால் பல அவார்டுகளை தட்டிக்கொண்டதோடு தன்னால் ஒரு விறுவிறுப்பான முழுநீள திரைப்படத்தை தர முடியும் என்பதைதீராநதி மூலம் நிரூபித்து இருக்கிறார்.புதியவகை திரைக்கதை உத்தியை கையாண்டு ஒரு விறுவிறுப்பான முறையில் ஒரு சஸ்பென்ஸ் திரைப்படத்தை ரசிக்க கூடிய வகையிலும் இயக்கி மக்களை சீட்டின் நுனியில் உட்கார வைக்கிறார். கதைப்படி புலம்பெயர்ந்து விசா கிடையாது அவதிப்படும் பாஸ்கருக்கு என்ன ஆனது?  ,ஈழப்போரில் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட பெண் மதனா
 பாஸ்க்கர் இருவரும் வாழ்க்கையில் இணைந்தார்களா? இக்காதலை எமது சமுதாயம் ஏற்றுக் கொண்டதா?என்பது தான் மீதி கதை. கதை எங்கேயுமே தொய்வு இல்லமால் விறுவிறுப்பாக செல்கிறது. அடுத்து என்ன என்பதை யோசிக்க வைக்கும் விதத்தில் இது இயக்குனரின் முதல் படம் என்று சொல்ல முடியவில்லை.குழப்பமில்லாமல் அழகாக கதையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ..

கவிநாத்தின் கேமரா அழகாக பாரீஸ் நகரை காண்பிப்பதுடன் படத்துக்கு கூடுதல் ப்ளஸ் ஆக அமைகிறது. . சங்கரின் விறு விறு எடிடிங், றொபேட் அவர்களின் வண்ணக்கலவை, விஷுவல் எபக்ட் , கஜி அவர்களின் காதை கிழிக்காத மெல்லிய இசை, கஜன் அவர்களின் குரலின் இனிமை இந்த பாடல் வரிகளுடன் சேர்ந்து படத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

சதா பிரணவனின் பாடல் வரிகள், சுஜித் ஜி அவர்களின் டைடில் பாடல், விஜிதனின் கிராபிக் டிசைன்ஸ் போன்றன படத்தின் சிறப்பு அம்சங்கள். ஈழ தேசத்து யாழ்ப்பான தமிழ் உரையாடல் படத்தின் மெகா பிளஸ். கேசவன் அவர்கள்
இணை இயக்கம் ! தயாரிப்புஎழுத்துஇயக்கம் – , நடிப்பு .பாஸ்கர் தீராநதி ஒரு வெற்றி படம் என்பதில் சந்தேகம் இல்லை.