சினிமா:- கடந்த 30 நாட்களில் வெளிவந்த திரைப்படங்கள்

2011-05-12 பாசக்கார நண்பர்கள்
நடிகர்கள்: அஜ்மல்கான்,திவ்யா நாகேஷ், ராதாரவி, வெ.ஆ.மூர்த்தி.
கதை: வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்காக உதவி செய்யும் நோக்கத்தில் சகமானவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது தான் மையக்கரு.
கருத்து: காதலும், காமெடியும் இந்த படத்தின் கூடுதல் பலம்.
புள்ளிகள்:50
2011-05-12 அழகர்சாமியின் குதிரை
நடிகர்கள்: அப்புக்குட்டி, சரண்யா,பிரபாகரன், சூரி,அழகன், மோகன்.
கதை:காணமல்போன கோவில்க் குதிரையும்,கூடவந்த காதலும் கைக்கெட்டியதைக் கூறும் கதை.  
 கருத்து: யதார்த்த மக்களை, மண்ணை, கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ஜெயித்துவிடுகின்றன. தேர்ந்த படப் பிடிப்பும், களமும், வசனமும், நடிப்பும் ஓரளவுக்கு இருந்தாலே வெற்றி உறுதி.
புள்ளிகள்:55
2011-05-07 விகடகவி
நடிகர்கள்: சதீஷ், அமலா பால்.
கதை: ஆடி மாதத்தில் பிறந்த பிள்ளைகள் ஊருக்கு அடங்காது என்பது கிராமத்து பழமொழி. அதை கிராமத்து இளைஞர்களே பொய்யாக்கும் கதை.
புள்ளிகள்:40
2011-05-07 காதல் மெய்பட
நடிகர்கள்: விஷ்ணுபிரியன், மதுமிதா,தண்டபானி, கஞ்சாகருப்பு.
கதை: காதலும் வில்லனும் கலந்த வழமையான கதை.
 கருத்து: நாலுவரி கதையை நான்காயிரம் கிலோ மீட்டர் சுற்றி முடிகிறது.
புள்ளிகள்:35
2011-05-02 வானம்
நடிகர்கள்: சிம்பு,பரத், சரண்யா பொன்வன்னன், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், சந்தானம்.
கதை: அன்பே சிவம் என்பதை உணர்த்து அதை யோசித்து ஐந்து கதைகளை ஒரே திரைக்கதையின் மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.
கருத்து:பாதி படம் பார்ப்பவர்களை சற்று வெருமையடைய வைத்தாலும், இரண்டாம் பாதியில் ரசிகர்களை அமைதியாக்கி புகழாரம் வாங்குகிறார் இயக்குநர்.
புள்ளிகள்:45
 2011-04-25 கோ
நடிகர்கள்: ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல், பிரகாஷ் ராஜ்.
கதை: ஒரு சாதரண பத்திரிகை புகைப்படக்காரர் தலையில் நாட்டை யார் ஆள வேண்டும் என்ற பொறுப்பு வந்தால் என்ன செய்வான் என்பதுதான் கதை.
 கருத்து: வரும் தொய்வு, சில இடங்களில் வரும் லாஜிக் மீறல்கள், இவை அனைத்தும் மிக சொற்பமான குறைகளே.
புள்ளிகள்:40
2011-04-21 மாப்பிள்ளை
நடிகர்கள்: தனுஷ், ஹன்சிகா, மனோபாலா, விவேக்.
கதை: இருபது வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த மாப்பிள்ளை படத்தின் ரீமேக் தான் இந்த மாப்பிள்ளை.
 கருத்து: மொக்கை
புள்ளிகள்:35

No comments:

Post a Comment