உரையாடல்: ஒருதொடர் :
கனடாவில் மகன் வீட்டில் வாழும் பறுவதம் பாட்டிக்கு காதிலியந்தப் புதினம் கிடச்சதிலையிருந்த்து கையும் ஓடலை, காலுமோடலை. இதை எப்பிடியும் மகள் வீட்டில் வாழும் மனிசன் காதிலை போட்டு விடுவம் எண்டு போனிலை பலமுறையும் முயற்சி செய்தும் பலன் கிட்டவில்லை.
"ம்...பக்கத்தில இந்த மனுசன் இருந்தா ஏன் இந்தப்பிரச்சனை!வீட்டில மேள் இருக்கிறாளாக்கும். அவள் வீட்டில் இருக்கும்வரை இந்த மனுசன் போன் எடுக்கமாட்டார்". பாட்டி தனக்குள் முணுமுணுப்பது எனக்குத் தெளிவாக கேட்கிறது.
பாவம் அவர்கள், கனடா வந்ததிலையிருந்து இப்படித்தான் வாழ்ந்துகொண்டு...
நகைச்சுவை:
பேஷண்ட் : டாக்டர் ....என் புருஷன் கொஞ்ச நாளாவே தூக்கத்தில பேசறாரு...இதுக்கு என்ன பண்ணலாம் ?...........
டாக்டர்: நீங்க அவர பகல்ல கொஞ்சம் பேச விட்டா எல்லாம் சரியாய் போயிடும்.
----------------------------------------------------------
பேஷண்ட்: டாக்டர் ..எனக்கு மூணு நாளா சரியான இருமல்...
டாக்டர்: மூணு நாளா சும்மவாவ இருந்தீங்க ?
பேஷண்ட்: இல்ல டாக்டர் இருமிட்டுதான் இருந்தேன்
--------------------------------------------------------
டாக்டர்: இந்த டாக்டர் தொழிலையே விட்டுடலாமுன்னு இருக்கேன்
நண்பர் : ஏன் டாக்டர் பேஷண்ட்ஸ் யாரும் வரதில்லையா?
டாக்டர் :...
ஆன்மீகம்:விவேகானந்தர்
கடவுள் என்பவர் அண்டம் முழுவதையும் படைத்துக் காப்பவர் என்றும்> அவர் எல்லாச் சக்திகளும் பொருந்தியவர் என்றும்> இறப்பு> பிறப்பு> இரவு> பகல்> இன்பம்> துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த நிலை என்றும் கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர்.. அன்பு> புனிதம்> கருணை என்பவற்றின் மறு பொருள் கடவுள் என கூறுகின்றனர். கடவுள் அவனை;; மனக்கண்ணில் நாம் காணவேண்டும்> ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும்> அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக...
வினாடிக் கதை: அவனும் ஒரு நண்பனே!
ஏனோ தெரியவில்லை.அவனை எனக்குப்பிடிக்கவில்லை.தினசரி என் அலுவகத்தில் அவனை நான் சந்தித்தாலும் அவனுடன் பேச எனக்கு ஏனோ விருப்பமில்லை.அவனை அருகில் சந்திக்கும் போதெல்லாம், பாராமுகமாய்சென்றிருக்கிறேன்.
அன்று ஒருநாள் வேலையின்போது வந்த தொலைபேசியில் ,வந்த துயரச் செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. மேசையில் சாய்ந்துவிட்டேன்.
சிலநிமிடங்கள் கழிந்திருக்கும்.இதமான காற்று என்னை வருடஎன்தலையை நிமிர்த்திப்பார்க்கிறேன். என்னால் வெறுக்கப்பட்டவன் விசிறியால் விசுக்கியபடி, எனக்காக கையிலே கோப்பிக்கப்புடன் நிண்டு கொண்டிருந்தான...
கவிதை: நாம்தமிழர் (#1)
ஒற்றுமைக்காக
ஒழுங்கமைக்கப்பட்ட
ஒன்றுகூடல்
ஒத்தகருத்தின்மையால்
ஒடிந்து
ஒழிந்தது...
Subscribe to:
Posts (Atom)