குறும் படமும் திரையின் புதினங்களும்

குறும்படம்-முகில் முகில்



திரை சொல்லும் புதினங்கள்


வயதான நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா

தெலுங்கில் 60 வயதான மூத்த நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க சில நடிகைகள் மறுத்துள்ள நிலையில் திரிஷா நடிக்க ஒப்புக்கொண்டு இருப்பதாக தெலுங்கு பட உலகில் தகவல் தெரிவிக்கிறது.

 

சினிமா அருங்காட்சியகம் அமைக்கும் நாகார்ஜுனா

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நாகார்ஜுனா தமிழில் ரட்சகன் படத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவுக்கு ஐதராபாத்தில் ஸ்டூடியோ உள்ளது. அடுத்து சினிமா அருங்காட்சியகம் தொடங்க திட்டமிட்டு உள்ளார்.

 

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் விழிப்புணர்வு வீடியோ மூலம் வலியுறுத்தி உள்ளார்.

 

நடிகர் வடிவேல்

ஒரு படத்தில் சும்மா உட்காருவது எவ்வளவு கஷ்டம் என்று சவால் விட்டு நடித்து இருந்தேன். அதை வெறும் படமாகத்தான் செய்தேன். ஆனால் உண்மையிலேயே எல்லோரும் சும்மா உட்கார்ந்தால் எப்படி இருக்கும் என்று உணர வைத்து இருக்கிறான் இறைவன். பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்''

 

நடிகர் சிவகுமார்

மூச்சு விடுவதில் சிரமம் மட்டும்தான் முன்பு கொரோனா அறிகுறியாக இருந்தது. இப்போது வயிற்றுப்போக்கு, வாந்தி. தலைவலி சேர்ந்து இருக்கிறது. இதில் எந்த அறிகுறி தெரிந்தாலும் உடனே டாக்டரை பார்த்து விடுங்கள்.வீட்டில் வைத்தியம் பார்ப்பதாக இருந்தால் தனியாக ஒரு அறையில் தங்க வைத்து விடுங்கள். சாப்பாடு பிளேட், டாய்லட் தனியாக இருக்க வேண்டும். குழந்தைகளை வெளியே விளையாட விடாதீர்கள்.அநாவசியமாக வெளியே சுற்றாதீர்கள். போய்தான் ஆகவேண்டும் என்றால் மூக்கு வாயை முககவசம் மூலம் மூடிக்கொள்ளுங்கள். 10 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். கையை அடிக்கடி கழுவுங்கள்.

முன்னாடியே ஊசி போட்டுக்கொண்டால் கொரோனா நம்மை கடுமையாக தாக்காது. உயிருக்கு ஆபத்தும் குறைவு. முழுமையான ஊரடங்கும், ஊசி போடுவதும்தான் கொரோனாவில் இருந்து நம்மை காப்பாற்றும். எல்லோரும் விழிப்புடன் இருந்து கொரோனாவை ஒழிப்போம்''.

தொகுப்பு:செ.மனுவேந்தன்

 


No comments:

Post a Comment