"அறிவியல் நோக்கில்....பகுதி-46-பெளத்தம் ஒரு அலசல்''

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]



[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

[இவ்வரலாறுக்  கருத்துக்களுக்கு தீபம் இணையத்தளம் பொறுப்பு அல்ல.]


பகுதி: 46 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தீயகுணங்களும் செயல்களும் கொண்ட விஜயனின் வருகைக்கு, புத்தர் உண்மையில் இலங்கையைத் தயார்படுத்துவாரா?'

 


அத்தியாயம் 9, ஏற்கனவே விளக்கியது போல, விஜயனின் வம்சாவளி, அவரது தீய பாத்திரங்கள் அல்லது செயல்கள், அவரது கட்டாய நாடுகடத்துதல், கடல் பயணம் மற்றும் இறுதியாக இலங்கைக்கு வந்ததைப் பற்றி பேசுகிறது. ஆனால், அவர்கள் இலங்கையில் இறங்கிய இடத்தை தீபவம்சம் குறிப்பிடவில்லை. என்றாலும், அவர்கள் இறங்கிய இடம் மண்ணின் நிறத்தின் அடிப்படையில் தம்பபன்னி [Tambapanni] என்று பெயர் பெற்றது. [34. The town of Tambapaṇṇi surrounded by suburbs was built by Vijaya in the south on the most lovely bank of the river.] 

 

மனைவிகளையும் குழந்தைகளையும் நாட்டை  விட்டு அகற்ற அரசன் ஆணையிட்டதால், விஜயனுக்கு அப்பொழுதே மனைவி, பிள்ளைகள் இருக்கலாம்? அப்படி என்றால் அவனுக்கு, இலங்கையில் நடந்த திருமணத்துடன் சேர்த்து, ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்ததாகத் தெரிகிறது. இலங்கையில் தரையிறங்கிய பிறகு,  அவனோ அவனுடன் வந்தவர்களோ தங்கள் தங்கள் மனைவி பிள்ளைகளைப் பற்றி யோசிக்கவும் இல்லை அல்லது அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும் இல்லை. புத்தர் ஆதரித்த அவர்களிடம், என்ன மனிதத் தன்மை! யாராவது இதற்கு பதில் கூறுவார்களா? 

 

9-38 இன் படி, ஏழு ஆண்டுகளில் நிலம் மக்கள் கூட்டமாக இருந்தது. [38. (அவரது ஆட்சியின்) ஏழு ஆண்டுகள் கடந்தபோது, ​​நாடு மக்கள் கூட்டமாக இருந்தது. அந்த இளவரசன் முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான்.] ஏழெட்டு ஆண்டுகளில் விஜயன் ஆண்ட நிலப்பரப்பை மனிதர்களால் நிரப்புவதற்கு, கட்டாயம் அண்டை நாட்டில் இருந்து பெருமளவான மக்கள் வெளியேறி வந்திருக்க வேண்டும். அப்படி வரக்கூடிய இடம் தென் இந்தியா மட்டுமே என்பதையும் கவனிக்க? ஏன் என்றால், அதற்க்கு முதல் இலங்கையில் வாழ்த்த பூர்வீக குடிகளை, அன்பின், கருணையின் சொரூபமான புத்தர் வெருட்டி, பயம்காட்டி  கலைத்துவிட்டாரே?

 

சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், ஏழு வருடங்களில் தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் கூட்டமாகத் தீவில் வந்து குடியேறுவது சாத்தியமில்லை. அது மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள எந்த புராணம் அல்லது வரலாற்று பதிவுகளிலும் கூட,  வங்க நாட்டில் இருந்து அல்லது அருகிலுள்ள ஒரிசாவிலிருந்து [Vanga or from the nearby Orissa] இலங்கைக்கு மக்கள் வெகுஜன நடமாட்டம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. விஜயன்  தனது சொந்த நாட்டிலும், சுப்பரா [சுப்பராகா] மற்றும் பருகாச்சாவிலும் [Suppara and Bharukaccha] குற்றவியல் அல்லது தீய நடத்தையில் ஈடுபட்டவர் ஆகும். அதில் இருந்து அவர் விலகவும் இல்லை. அப்படிப்பட்ட, இந்த குற்றவாளியின் வருகைக்கு இலங்கையைத் தயார்படுத்துவது, ஞானம் பெற்ற புத்தரின் உருவத்திற்கு அவமானத்தை விட வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

பரூச் (Bharuch)  இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நர்மதை ஆறு காம்பத் வளைகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்நகர் பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டைய காலத்தில் பரூச் துறைமுக வாயிலாக சீனா, எகிப்து, ரோம், இலங்கை, மதுரை, சுமத்திரா, அரேபியா, பாரசீகம் போன்ற நாடுகளுடன், தங்கம், நவரத்தினங்கள், யாணைத் தந்தம், வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள், பட்டு பருத்தி துணிகள் கொண்ட வணிகம் செழிப்பாக இருந்தது. இது பண்டைய காலத்தில் பாருட்கட்சா [Bharutkatccha] என்று அழைக்கப்பட்டது. மேலும் சுப்பரா [சுப்பராகா] பெரும்பாலும் இந்திய துணைக் கண்டத்தின் மேற்கு விளிம்பில் உள்ள ஒரு நிலத்தைக் குறிக்கிறது. இதில் இந்தியாவின் மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகில் உள்ள புகழ்பெற்ற துறைமுகமான சுப்பராகா (இன்றைய சோபாரா / Sopara) அடங்கும் என நம்பப் படுகிறது.

 

தீபவம்சத்தின்படி விஜயன் இலங்கையில் திருமணம் ஒன்றும் செய்து கொள்ளவில்லை, எனவே அவருக்குப் பின், அவருக்குப் பிள்ளைகள் இருக்கவில்லை. அவர் தனது சகோதரன் சுமித்தாவிடம் [Sumitta] இலங்கைக்கு வந்து அரசாட்சியை தொடரும் படி செய்தி அனுப்பினார். மேலும் புத்தரின் மரண நாளில், மகாபரிநிர்வாண நாளில் அவர் [விஜயன்] இலங்கைக் கரையில் இறங்கியதும், எதோ ஒரு நோக்கத்தை நிலைநாட்டிட,  கண்டுபிடிக்கப்பட்ட கற்பனையாகத்தான் இருக்க வேண்டும்?

 

தீவின் பக்திமிக்க பௌத்தர்கள் விஜயனின் தீய குணாதிசயங்களைப் பற்றி வெட்கப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. மாறாக, பொல்லாத, பயமுறுத்தும் செயல்களைச் செய்து, மக்களைக் கொள்ளையடித்த விஜயனை நினைத்துப் பெருமிதம் கொள்கிறார்கள். கடந்த காலத்திலும், பெரும்பாலான துறவிகள் மற்றும் புத்த சமயத்தை பின்பற்றும் பாமர மக்களின் கைதட்டலுக்கு, தமிழர்கள் இதே தீய சிகிச்சைக்கு ஆளானதில் ஆச்சரியமில்லை. இலங்கையின் கடந்த கால 100 ஆண்டு வரலாறு இவற்றைப் பற்றி பேசும். நான் கோடிட்டு காட்டத் தேவையில்லை?

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

 

 *ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

Theebam.com: "அறிவியல் நோக்கில்...."பெளத்தம் ஒரு அலசல் . "

 

Part: 46 / Appendix – Dipavamsa / 'Is Buddha really prepare Lanka for the arrival of this criminal, Vijaya?'


The Chapter 9 speaks of Vijaya’s ancestry, his evil characters, his forced exile and drifting in the sea, and finally his arrival in Lanka. As shown elsewhere, Vijaya’s birth is biologically impossible. Vijaya and all his brothers are invented personalities. Naïve Buddhists may believe in it, but the Tamils need not consider these as human historical facts. Vijaya and his companions first landed at the port city of Suppara. This must be the present day Surat in Gujarat.  They behaved very badly though the people of Suppara first hospitably received them. Their behaviour made the people of Suppara angry, and Vijaya and his companions had to flee. They landed next in Bharukaccha, the present day Broach in Maharashtra. Again, they exasperated the people of Bharukaccha and they had to flee again and landed in Lanka. The map in the ‘Appendix – Asoka’ locates these two port cities on the western coast of India. The Dipavamsa does not identify the place at which they landed in Lanka. The place where they landed is Tambapanni based on the colour of the soil.The Dipavamsa does not say he had seven hundred companions. Vijaya, his attendants, man-servants and the hired workmen are together seven hundred men. Vijaya seems to have more than one wife, as the king decreed to remove wives and children. He never tried to find them after landing in Lanka. As per 9-38, the land was crowded with people in seven years. There must have been a mass exodus of people from adjoining countries to crowd the land in seven years. The people must have come from the adjoining Tamil countries. It is impossible for people to come from faraway places to crowd the island in seven years about two thousand five hundred years ago. There is no mention of mass movement of people from Vanga or from the nearby Orissa to Lanka in any Puranic records in India. Vijaya is a person of criminal behaviour in his home country, as well as at Suppara and Bharukaccha. It is a shame on the image of the enlightened Buddha to prepare Lanka for the arrival of this criminal. Vijaya is not married in Lanka as per the Dipavamsa, and therefore he had no offspring to succeed him. He sent a message to his brother Sumitta to come to Lanka to take over the kingship. His landing on the shore of Lanka on the day of Mahaparinirvana, death, of Buddha, must also be an invented fiction. It is a pity that the pious Buddhists of the Island are not ashamed of the evil characters of Vijaya. All saffron clad monks all over the Island are very proud of Vijaya who committed wicked and fearful deeds, and plundered people. No wonder Tamils are subject to the same evil treatment to the applause of the monks and the laity.

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 47 தொடரும் / Will follow

"தூக்கமும் முதுமையும்"-

 – உண்மையில் ஆய்வுகள் என்ன சொல்கின்றன?


“நன்றாகத் தூங்கினால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்” என்று நாம் பொதுவாகக் கூறுவோம். ஆனால் தூக்கத்திற்கும் வயதாகும் செயல்முறைக்கும் உண்மையில் என்ன தொடர்பு இருக்கிறது?

சமீபத்தில் வெளியான ஒரு பெரிய ஆய்வு, தூங்கும் நேரத்திற்கும் உயிரியல் முதுமைக்கும் (Biological Ageing) இடையே U-வடிவத் தொடர்பு இருப்பதாகக் கூறியுள்ளது. அதாவது, மிகக் குறைவான தூக்கமும் மிக அதிகமான தூக்கமும் சில உயிரியல் முதுமைக் குறியீடுகளுடன் தொடர்புடையதாகக் காணப்பட்டுள்ளன.

ஆனால் இதை “குறைவாகத் தூங்கினால் நிச்சயமாக விரைவில் வயதாகிவிடுவோம்” என்று புரிந்துகொள்ளக் கூடாது. ஆய்வு காட்டுவது தொடர்பு; காரணம்–விளைவு உறவு முழுமையாக நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று கூற முடியாது.

 

1. சுமார் 5 லட்சம் பேரின் தரவுகளை ஆய்வு செய்த Nature ஆய்வு

2026-ஆம் ஆண்டு Nature இதழில் வெளியான ஆய்வு, UK Biobank-இல் இடம்பெற்ற சுமார் 5 லட்சம் பேரின் தரவுகளை பயன்படுத்தியது. ஆய்வில் 37 முதல் 84 வயதுக்குட்பட்டவர்களின் தூக்க நேரம் மற்றும் பல்வேறு உயிரியல் முதுமைக் கடிகாரங்கள் (Biological Ageing Clocks) ஆகியவை ஒப்பிடப்பட்டன.

இந்த ஆய்வின் தொடர்புடைய ஆய்வாளர்களில் Columbia University-யின் Junhao Wen உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இடம்பெற்றிருந்தனர்.

ஆய்வாளர்கள் மூளை உள்ளிட்ட பல உறுப்புகள் மற்றும் உடல் அமைப்புகளின் உயிரியல் வயதை மதிப்பிடும் 23 biological ageing clocks-ஐப் பயன்படுத்தினர். இவை MRI படங்கள், இரத்தத்தில் உள்ள புரதங்கள் (proteomics), metabolites போன்ற பல்வேறு உயிரியல் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.

 

2. தூக்கத்திற்கும் உயிரியல் முதுமைக்கும் U-வடிவத் தொடர்பு

ஆய்வின் முக்கியமான கண்டுபிடிப்பு U-shaped relationship ஆகும்.

அதாவது:

மிகக் குறைவான தூக்கம் → அதிக biological ageing

இடைப்பட்ட அளவு → குறைந்த biological ageing

மிக அதிகமான தூக்கம் → மீண்டும் அதிக biological ageing

என்ற தொடர்பு பல உயிரியல் அளவுகோள்களில் காணப்பட்டது.

ஆய்வில் பயன்படுத்தப்பட்ட தரவுகளின்படி, பல biological ageing measures-ல் குறைந்த biological age gap காணப்பட்ட தூக்க நேரங்கள் சுமார் 6.4 முதல் 7.8 மணி நேரம் வரை மாறுபட்டன. எந்த ஒரு குறிப்பிட்ட உறுப்புக்கும் “இதுதான் கட்டாயமான சரியான தூக்க நேரம்” என்று ஆய்வு கூறவில்லை.

இதனால், “மூளைக்கு 8 மணி நேரமும் இதயத்திற்கு 6 மணி நேரமும் தேவை” என்று இந்த ஆய்வை விளக்குவது சரியானதல்ல.

 

3. 6–8 மணி நேரம் என்றால் அனைவருக்கும் அதுவே சரியா?

இங்கு ஒரு முக்கியமான வேறுபாட்டை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த Nature ஆய்வு தனது பகுப்பாய்வில் 6–8 மணி நேரத்தை “normal sleep” என்ற ஒப்பீட்டு வகையாகவும், 6 மணி நேரத்திற்குக் குறைவானதை short sleep என்றும், 8 மணி நேரத்திற்கும் அதிகமானதை long sleep என்றும் வகைப்படுத்தியது.

இதன் பொருள் “ஒவ்வொரு பெரியவரும் கட்டாயமாக 6–8 மணி நேரம்தான் தூங்க வேண்டும்” என்பதல்ல.

முந்தைய sleep-health வழிகாட்டுதல்கள், ஆரோக்கியமான பெரியவர்கள் வழக்கமாக 7 மணி நேரம் அல்லது அதற்கு மேல் தூங்க வேண்டும் எனக் கூறுகின்றன; தனிநபரின் வயது, உடல்நிலை மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைக்கு ஏற்ப தேவையான தூக்கம் மாறுபடலாம்.

எனவே தூக்கத்தைப் பற்றி பேசும்போது மணி நேரம் மட்டுமல்ல; தூக்கத்தின் தரம், தொடர்ச்சி, நேர ஒழுங்கு மற்றும் தூக்கக் கோளாறுகள் உள்ளனவா என்பதும் முக்கியம்.

 

4. ஒரே ஒரு இரவு குறைவாகத் தூங்கினால் என்ன ஆகும்?

இதுகுறித்து முன்னதாக UCLA Cousins Center for Psychoneuroimmunology ஆய்வாளர்கள் மேற்கொண்ட சிறிய ஆய்வும் கவனம் பெற்றது.

61 முதல் 86 வயதுடைய 29 முதியவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்கள் நான்கு இரவுகளைக் கொண்ட ஒரு பரிசோதனை முறையில் பங்கேற்றனர். அதில் ஒரு கட்டத்தில் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை மட்டுமே தூங்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களின் இரத்தத்தில் உள்ள peripheral blood mononuclear cells-ன் gene-expression மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தூக்கம் கட்டுப்படுத்தப்பட்ட இரவுக்குப் பிறகு, DNA damage மற்றும் cellular senescence போன்ற உயிரியல் செயல்முறைகளுடன் தொடர்புடைய gene-expression மாற்றங்கள் காணப்பட்டன.

ஆனால் இங்கு மிக முக்கியமான ஒரு எச்சரிக்கை உள்ளது:

ஒரே ஒரு இரவு நான்கு மணி நேரம் தூங்கினால் ஒருவர் உடனடியாக வயதாகிவிடுகிறார் என்று இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை.

இந்த ஆய்வு சிறிய எண்ணிக்கையிலான 29 பேரை மட்டுமே கொண்டது. மேலும் ஆய்வில் காணப்பட்டது செல்களின் gene-expression மற்றும் biological pathways-ல் ஏற்பட்ட மாற்றங்கள்; ஒருவரின் “உடல் வயது” உண்மையில் சில ஆண்டுகள் அதிகரித்துவிட்டது என்பதல்ல.

 

5. அதிகமாகத் தூங்குவதும் ஏன் ஆய்வுகளில் பேசப்படுகிறது?

தூக்கம் குறைவாக இருப்பது மட்டுமே பிரச்சினை அல்ல. சில பெரிய ஆய்வுகளில் நீண்ட நேரம் தூங்குவதும் பல உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகக் காணப்பட்டுள்ளது.

2026 Nature ஆய்விலும் 8 மணி நேரத்திற்கும் அதிகமான தூக்கமும் 6 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கமும், 6–8 மணி நேரத்தை ஒப்பீட்டு வகையாகக் கொண்டபோது, பல்வேறு நோய்கள் மற்றும் all-cause mortality ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் காணப்பட்டன.

ஆனால் இதிலிருந்து:

“அதிகமாகத் தூங்குவதுதான் நோயை ஏற்படுத்துகிறது”

என்று முடிவு செய்ய முடியாது.

உடலில் ஏற்கனவே இருக்கும் சில நோய்கள் அல்லது உடல்நலப் பிரச்சினைகள் ஒருவரை அதிக நேரம் தூங்கச் செய்யக்கூடும். இதையே reverse causality என்று ஆய்வுகளில் குறிப்பிடுகின்றனர். Nature ஆய்வும் இந்த சாத்தியத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது என்று குறிப்பிடுகிறது.

 

6. தூக்கத்தின் தரமும் முக்கியம்

ஒருவர் எட்டு மணி நேரம் படுக்கையில் இருந்தாலும், இரவு முழுவதும் அடிக்கடி விழித்துக் கொண்டிருந்தால், அந்த எட்டு மணி நேரமும் ஒரே தரமான தூக்கமாக இருக்காது.

நல்ல தூக்கத்திற்கு:

  • போதுமான நேரம்
  • தூக்கம் தொடர்ந்து இருப்பது
  • ஒழுங்கான தூங்கும்–எழும் நேரம்
  • தேவையான அளவு REM மற்றும் NREM தூக்கம்
  • தூக்கத்தைத் தடுக்கும் கோளாறுகள் இல்லாமை

போன்ற அம்சங்கள் முக்கியமானவை.

எனவே “deep sleep மட்டுமே முக்கியம்; மொத்த தூக்க நேரம் முக்கியமல்ல” என்றும் கூற முடியாது. இரண்டும் முக்கியமானவை.

 

7. குறட்டை வந்தால் ஆழ்ந்த தூக்கம் என்று அர்த்தமா?

இல்லை.

குறட்டை என்பது ஆழ்ந்த தூக்கத்தின் அடையாளம் அல்ல.

தொடர்ந்து அல்லது அதிகமாகக் குறட்டை விடுவது சிலரிடம் obstructive sleep apnea போன்ற தூக்கத்தில் சுவாசம் தடைபடும் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.

குறட்டை விடும் அனைவருக்கும் sleep apnea இருக்கும் என்று கூற முடியாது. ஆனால் குறட்டையுடன் சேர்ந்து:

  • தூக்கத்தில் மூச்சுத் திணறல்
  • மூச்சு நின்றது போலத் தோன்றுதல்
  • பகலில் அதிக தூக்கம்
  • காலை தலைவலி
  • கவனம் செலுத்துவதில் சிரமம்

போன்றவை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பயனுள்ளதாக இருக்கும்.

 

8. வயது அதிகரிக்கும்போது தூக்கம் மாறுமா?

ஆம்.

வயது அதிகரிக்கும்போது தூங்கும் நேரம், தூக்கம் வரும் நேரம், இரவில் விழிக்கும் எண்ணிக்கை மற்றும் தூக்கத்தின் கட்டமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இதனால் வயதான ஒருவர் முன்பைப் போல நீண்ட நேரம் தொடர்ச்சியாகத் தூங்காமல் இருக்கலாம்.

ஆனால் “வயதானவர்களுக்கு மிகக் குறைந்த தூக்கமே போதும்” என்று கூறுவதும் சரியல்ல.

வயதானவர்களும் போதுமான, தரமான தூக்கத்தைப் பெறுவது உடல் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.

 

9. நல்ல தூக்கத்திற்காக என்ன செய்யலாம்?

தூக்கத்தை மேம்படுத்த உதவும் சில எளிய பழக்கங்கள்:

1. ஒரே நேரத்தில் படுக்கவும், ஒரே நேரத்தில் எழவும்
வார இறுதியிலும் தூக்க நேரத்தை மிக அதிகமாக மாற்றாமல் இருப்பது உடலின் biological clock-க்கு உதவலாம்.

2. பகலில் உடற்பயிற்சி செய்யவும்
தொடர்ச்சியான உடற்பயிற்சி நல்ல தூக்கத்துடன் தொடர்புடையது.

3. இரவு நேர caffeine-ஐ குறைக்கவும்
காபி, தேநீர் போன்ற caffeine உள்ள பானங்களை தூங்குவதற்கு அருகில் உட்கொள்வது சிலரின் தூக்கத்தை பாதிக்கலாம்.

4. மதுவை தூக்க மருந்தாகப் பயன்படுத்த வேண்டாம்
மது தூக்கம் வருவது போல் தோன்றச் செய்தாலும், தூக்கத்தின் இயல்பான கட்டமைப்பையும் தரத்தையும் பாதிக்கலாம்.

5. படுக்கைக்கு முன் அதிகமான வெளிச்சம் மற்றும் திரைப் பயன்பாட்டைக் குறைக்கவும்
முக்கியமாக இரவு நேரத்தில் அதிகமான stimulation சிலருக்கு தூங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தலாம்.

6. தொடர்ந்து தூக்கப் பிரச்சினை இருந்தால் காரணத்தைத் தேடுங்கள்
நீண்டகாலமாக தூக்கமின்மை, அதிக பகல் தூக்கம், கடுமையான குறட்டை அல்லது தூக்கத்தில் மூச்சுத்திணறல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

10. தூக்கத்தைப் பற்றி நாம் நினைவில் கொள்ள வேண்டியது என்ன?

தூக்கம் என்பது வெறும் “ஓய்வு நேரம்” அல்ல.

உடல் செயல்பாடுகள், மூளையின் செயல்பாடு, நினைவாற்றல், மனநிலை மற்றும் பல்வேறு உயிரியல் செயல்முறைகளுடன் தூக்கம் தொடர்புடையது.

2026-ஆம் ஆண்டு வெளியான பெரிய Nature ஆய்வு, தூக்க நேரத்திற்கும் biological ageing-க்கும் இடையே U-வடிவத் தொடர்பு இருப்பதாக வலுவான ஆதாரங்களை வழங்கியுள்ளது. ஆனால் இந்த ஆய்வு “ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணி நேரமே அனைவருக்கும் சரியானது” என்றும், “குறைவாக அல்லது அதிகமாகத் தூங்குவதுதான் முதுமையை நேரடியாக ஏற்படுத்துகிறது” என்றும் நிரூபிக்கவில்லை.

அதேபோல், 29 முதியவர்களைக் கொண்ட UCLA ஆய்வு, ஒரு இரவு partial sleep deprivation-க்குப் பிறகு cellular ageing-உடன் தொடர்புடைய gene-expression மாற்றங்களைச் சுட்டிக்காட்டியது. ஆனால் அதையும் “ஒரே இரவில் மனிதர் வயதாகிவிடுகிறார்” என்று பொருள் கொள்ளக்கூடாது.

இறுதியாக...

தூக்கத்தில் “குறைவுதான் நல்லது” என்பதும் தவறு; “அதிகம்தான் நல்லது” என்பதும் தவறு.

நமக்கு தேவையான அளவு, தரமான மற்றும் தொடர்ச்சியான தூக்கத்தைப் பெறுவதே முக்கியம்.

தூக்கத்தை ஒரு போட்டியாகப் பார்க்காமல், உடலின் இயற்கையான தேவையாகப் பார்ப்பதே சிறந்த அணுகுமுறை.

நல்ல தூக்கம் — நீண்ட ஆயுளுக்கான உத்தரவாதம் அல்ல; ஆனால் ஆரோக்கியமான முதுமைக்கான முக்கியமான துணை.

தீபம் உடல்நலம்